Union Budget 2025: 'ரூ.3 லட்சத்திலிருந்து தற்போது ரூ.5 லட்சம்'- கிஷான் கிரெடிட் கார்டு வரம்பு உயர்வு
மத்திய பட்ஜெட் தாக்கல் 11 மணிக்குத் தொடங்கி தற்போது நடந்து வருகிறது.
பட்ஜெட் பேச்சின் தொடக்கத்தில் நிதியமைச்சர் பொருளாதார மேம்பாடு, ஒருங்கிணைந்த வளர்ச்சி, தனியார் முதலீடு அதிகரிப்பு, மக்கள் மேம்பாடு, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் உயர்வு ஆகிய `5 முக்கிய அம்சங்கள்' இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன என்று பேசினார்.
மத்திய நிதியமைச்சர் முதலாவதாக விவசாயத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை அறிவிக்க தொடங்கினார்.
அதில், "விவசாயிகள், மீனவர்கள், பால் சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு கிஷான் கிரெடிட் கார்டுகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் 7.7 கோடி விவசாயிகள் பலனடைந்துள்ளனர். இந்த கிரெடிட் கார்டு மூலம் பயனாளர்கள் சிறு கடன்கள் வாங்க முடியும். இதன் கடன் வரம்பு 3 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது" என்று பேசியுள்ளார்.