UPSC / TNPSC : ``தேர்வில் மிக எளிதாக வெற்றிபெறலாம்; அதற்கு..." - விளக்கும் சத்யஶ்ரீ பூமிநாதன்
'UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.
'UPSC/TNPSC குரூப் -1, 2 - தேர்வுகளில் வெல்வது எப்படி?' என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம், வருகிற ஏப்ரல் 27-ம் தேதி சென்னை தி.நகர், G.N செட்டி ரோட்டில் உள்ள வாணி மஹாலில் நடைபெற இருக்கிறது. அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது.

இந்த நிகழ்வில் Dr.P. விஜயகுமார் IPS, Joint Commisioner மற்றும் புதுச்சேரியின் M. ராஜ்குமார் IFS, போட்டி தேர்வு பயிற்றுநர் Dr. சங்கர சரவணன், ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டித் தேர்வுகள் குறித்த தங்களுடைய அனுபவங்களையும் ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்கள்.
இவர்களுடன் ஊக்க உரை அளிக்க உள்ள King Makers IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதன் இந்த பயிற்சி முகாம் குறித்தும், போட்டித் தேர்வு குறித்தும், ``7 லட்சம் பேர் ஒவ்வொரு ஆண்டும் பட்டப்படிப்பு முடித்து வருகிறார்கள் என்றாலும், UPSC உள்ளிட்ட தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் வெறும் 25 ஆயிரம் நபர்கள் மட்டுமே. இதில் பெரும்பாலானவர்கள் இன்ஜினீயரிங் படித்தவர்கள். ஆனால், வரலாறு, புவியியல், இந்திய அரசியலமைப்பு, சுற்றுச்சூழல், உலக வரலாறு, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட Humanities studies தான் இந்தத் தேர்வுக்காக படிப்போம்.
ஏற்கெனவே இதுபோன்ற படிப்புகளை முடித்தவர்களுக்கு இந்தத் தேர்வு மிக எளிதாக இருக்கும். அதனால், எந்த டிகிரி முடித்திருந்தாலும் இந்தத் தேர்வில் மிக எளிதாக வெற்றிபெறலாம்.
இந்த 'UPSC/TNPSC குரூப் -1, 2 உள்ளிட்ட எல்லாத் தேர்வுகளையும் தமிழ் வழியில் எழுதலாம். இந்தத் தகவல் இன்னும் முழுமையாக தமிழ்நாட்டின் கிராமங்கள் முழுவதும் சென்று சேரவே இல்லை. விருப்பப் பாடம் உட்பட எல்லாத் தேர்வுகளையும், நேர்முகத் தேர்வையும் தமிழில் எதிர்கொள்ளலாம். இது தெரியாததால் கிராமப்புற மாணவர்களிடம் இன்னும் அச்சம் நீடிக்கிறது.

UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகள் கடினமாக தேர்வாக நினைக்கிறோம். ஆனால், உண்மையில் வெற்றிபெரும் ஆயிரம் மாணவர்களில் 70 சதவிகித மாணவர்கள் கிராமப்புற பின்னணியைக் கொண்டவர்கள். இந்த தகவல் தெரிந்தால் இன்னும் அதிக கிராமப்புற மாணவர்கள் தேர்வுகளை எழுத முன்வருவார்கள் என நம்புகிறேன்.
'UPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், இதில் வெற்றி தள்ளிப்போனாலும், இந்தத் தேர்வின் தயாரிப்பை வைத்துக்கொன்டு Group 1, Group 2, SSC, RRB, வங்கித் தேர்வுகள் எனப் பல்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றிபெறலாம்.
தேர்வுக்கு தயாராகுவதன் அடிப்படை செய்தித்தாள் வாசிப்பது. இந்தப் பழக்கத்தை பள்ளிப் படிப்பிலிருந்து பழகிக் கொண்டுவர வேண்டும். இதுபோன்ற போட்டித் தேர்வுக்குத் தயாராக விரும்புபவர்கள், சமச்சீர் கல்வி, மெட்ரிகுலேசன், CBSC உள்ளிட்ட எந்தப் பள்ளிப் பாடத்திட்டத்தில் படித்திருந்தாலும் இந்தத் தேர்வில் பங்கெடுக்கலாம், வெற்றிபெறலாம்.
15 ஆண்டுகளுக்கு முன்புவரை UPSC தேர்வில், முதலிடம் பிடிப்பவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். 10, 15 சதவிகித தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வெற்றிபெற்றிருக்கிறார்கள்.
ஆனால், இப்போதெல்லாம் அப்படி யாரும் முதலிடம் வருவதே இல்லை. இதற்கு அரசியலோ, சூழ்ச்சியோ, அல்லது தேர்வு கடினமோ கிடையாது. நல்ல திறமையான பல மாணவர்கள் அன்று தேர்வை எழுதி அதிகாரிகளானார்கள்.
இன்று, திறமையான மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூவில் தனியார் துறைக்கு அதிக சம்பளத்துக்கு வேலைக்குச் சென்றுவிடுகிறார்கள். தனியார் மோகம் குறைந்தால்தான், நல்ல அதிகாரிகள் அரசு துறைக்கு வருவார்கள். தனியார் துறை 'நான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும்' என்ற எண்ணம், அரசுத் துறை என்பது 'அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பு'. இந்த எண்ணவோட்டம் இளைஞர்களுக்கு வேண்டும்.
UPSC படிக்கும் மாணவர்களுக்காக மத்திய, மாநில அரசுகளின் இலவச பயிற்சி, தங்குமிடம், ஊக்கத் தொகை எனப் பலதிட்டங்கள் இருக்கிறது. நமது King Makers IAS அகாடமியில் கூட முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு, கணவரை இழந்தவர்கள், கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்தவர்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு, முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு எனப் பலதரப்பட்டவர்களுக்கு ஊக்கத் தொகை, கட்டணத்தில் சலுகை எனப் பல திட்டங்களை செயல்படுத்துகிறோம். ஆனால், திறமையான மாணவர்கள் சரியான இடங்களுக்கு வருவதில்லை." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதுபோன்று ஆனந்த விகடன், King Makers IAS அகடாமி நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இலவச பயிற்சி முகாமினை பல ஆண்டுகளாக நடத்தி வருவதன் மூலம் எண்ணற்ற போட்டித் தேர்வாளர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
இந்தப் பயிற்சி முகாமிற்கு முன்பதிவு செய்ய 044- 66802997 என்ற எண்ணிற்கு மிஸ்ட்கால் கொடுக்கவும். அப்படி இல்லையென்றால் இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் கீழ்க்கண்ட விண்ணப்பத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.