டிரேடிங்கில் CSK வருகிறாரா வாஷிங்டன் சுந்தர்? - அஸ்வின் பகிர்ந்த தகவல்!
Vijay: "சண்டக்கோழி விஜய்க்காக எழுதின கதை; ஆனா" - நடிகர் விஷால் ஷேரிங்
2005-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியான 'சண்டக்கோழி' படம் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு 'சண்டக்கோழி 2' வெளியானது.
இந்நிலையில் விஷால் தனது யூடியூப் சேனலில் 'சண்டக்கோழி' படம் விஜய்க்காக எழுதிய படம்தான் என்று கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாகப் பேசியிருக்கும் அவர், "லிங்குசாமி 'சண்டக்கோழி' படக்கதையை விஜய்க்காகத்தான் எழுதி வைத்திருந்தார்.

ஆனா, நான் லிங்குசாமி கிட்ட ஒரு கதை இருக்குனு தெரிஞ்சதுமே, அவர்கிட்ட போயிட்டேன்.
'நீங்க ஒரு கதை வெச்சிருக்கீங்கனு கேள்விப்பட்டேன். அதை நாம ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணலாமா?'னு லிங்குசாமி கிட்ட கேட்டேன்.
'அது மாஸ் ஹீரோவுக்கு எழுதுன கதை'னு அவரு பதில் சொன்னாரு.
அதுக்கு நான், 'இன்னும் 10 நாள்ல நான் நடிச்ச செல்லமே படம் ரிலீஸ் ஆகும். அதை நீங்க பாருங்க'னு சொல்லிட்டு வந்தேன்.
செல்லமே செப்டம்பெர் 20 ரிலீஸ் ஆச்சு. படம் பார்த்த அப்புறமும் அவருக்கு ஒரு குழப்பம் இருந்துச்சு.

'ரெண்டு வருஷம் வெயிட் பண்ணாக்கூட பரவாயில்ல அவரு வெச்சுருக்க கதை 10 படத்துக்குச் சமம்'னு வீட்டிலையும் சொல்லியிருந்தேன்.
கண்டிப்பா அந்தப் படத்துல நடிச்சா, அது நம்மல வேறொரு இடத்துக்குக் கொண்டுபோகும்னு எனக்கு தெரியும்.
கடைசில, லிங்குசாமியும் ஒத்துக்கிட்டாரு. அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து பாசிட்டிவா 'சண்டைக்கோழி' படத்தைத் தொடங்கினோம்" என விஷால் கூறியிருக்கிறார்.















