நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர்!
WAQF Bill: ``ஆ.ராசா தலைமையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்'' - முதல்வர் ஸ்டாலின்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் தலைமையேற்று நலத்திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் வக்ஃபு திருத்த மசோதா குறித்து பேசுகையில், "வக்ஃபு வாரிய திருத்த மசோதாவை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நள்ளிரவு 2 மணிக்கு நிறைவேற்றியதை பார்த்திருப்பீர்கள். ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒன்றிய பா.ஜ.க அரசின் வக்ஃபு வாரிய திருத்த மசோதாவிற்கு தொடக்கத்திலிருந்தே தமிழ்நாடு அரசும் திமுகவும் கடுமையாக எதிர்த்து வந்தது.
ஆ.ராசா, திருச்சி சிவா போன்றோர் வக்ஃபு திருத்த மசோதாவை முழுமையாக படித்து உணர்ந்த பின்பே கடுமையாக எதிர்த்தனர். தீப்பறக்க அரை மணி நேரம் நாடாளுமன்றத்தில் பேசினார்கள். ஆனால், கிரிக்கெட்டில் முதல் பந்தில் டக் அவுட் ஆகும் வீரரைவிட குறைவான நேரம் மட்டுமே பேசியிருக்கிறார் அ.தி.மு.க - வைச் சேர்ந்த தம்பிதுரை.

அப்படியிருந்தும் இந்த திருத்த மசோதாவை ஆதரிக்கிறோமா எதிர்க்கிறோமா என்பதைச் சொல்லவில்லை. வக்ஃபு திருத்த மசோதா விவகாரத்தில் ஒன்றிய அரசைக் கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தோம். கழக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா தலைமையில் உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடரப்படும் " என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
