Wedding Plan: செலிபிரட்டி ஆடைகளை உங்கள் திருமணத்திற்கு ரீ-கிரியேட் செய்யலாமா?!
World Chess Championship: 'முதல் சுற்றில் குகேஷை திணறடித்த அந்த ஒரு மூவ்!' - குகேஷ் எப்படி தோற்றார்?
சிங்கப்பூரில் உலக சாம்பியனை நிர்ணயிக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நேற்று முதல் தொடங்கியிருக்கிறது. நேற்றைய நாளில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் தமிழக வீரரான குகேஷை சீன வீரரான டிங் லிரன் தோற்கடித்திருக்கிறார். இதன் மூலம் 14 போட்டிகள் கொண்ட தொடரில் டிங் லிரன் 1-0 என முன்னிலை பெற்றிருக்கிறார். இந்த ஆட்டத்தின் சில முக்கியமான நகர்வுகளைப் பற்றிய அலசல் இங்கே.
முதல் ஆட்டத்தில் வெள்ளை காய்களைக் கொண்டு விளையாடிய குகேஷ் முதல் நகர்வாக தனது சிப்பாயை e4 க்கு நகர்த்தித் தொடங்கினார். அதற்கு டிங் லிரன் தனதுச் சிப்பாயை e6-க்கு நகர்த்தினார்.
இது பிரெஞ்சு டிபன்ஸ் என்றழைக்கப்படும் ஓப்பனிங். டிங் லிரனின் இந்த மூவ் அனைவரையும் ஆச்சர்யத்தில் தள்ளியது. ஏனெனில், பிரெஞ்சு டிபன்ஸை இப்படியான பெரிய போட்டிகளில் காண்பது ரொம்பவே அரிது. மேலும், கடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் டிங் லிரன், இயன் நெபோம்னியாச்சிக்கு எதிராக ஒரு சுற்றில் பிரெஞ்சு டிபன்ஸ் ஆடி தோல்வியும் அடைந்திருக்கிறார். இதனால்தான் லிரன் மீண்டும் பிரெஞ்சு டிபன்ஸூக்கு சென்றதில் ஆச்சர்யம்.
முதல் ஆறு நகர்வுகளுக்கு இருவரும் வேகமாக ஆடிய நிலையில், 7-வது நகர்வுக்கு மட்டுமே டிங் லிரன் 27 நிமிடங்கள் யோசித்து தனது சிப்பாயை a5 க்கு நகர்த்தினார்.
டிங் லிரன் இந்த ஆட்டத்தில் 9-வது நகர்வில் நாவல்டி ஒன்றைக் கொண்டு வந்தார். நாவல்டி என்றால் ஓப்பனிங்கில் இதுவரைப் பெரிதாக விளையாடபடாதப் புதிய நகர்வை ஆடுவது. பிரெஞ்சு டிபன்ஸில் 9-வது நகர்வாக தனது மந்திரியை Be7-க்கு நகர்த்தினார்.
குகேஷ் சிறப்பாக அட்டாக்கிங் ஆட்டத்தை விளையாடி வந்தார். 16-வது நகர்வின் போது குகேஷ் ஆட்டத்தில் டிங் லிரனை விட கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அதிகமாக வைத்திருதார்.
17-வது நகர்விற்கு குகேஷ் 33 நிமிடங்கள் யோசித்துத் தனது இராணியை Qe2-க்கு நகர்த்தினார். இதன் மூலம் அவரின் நேரமும் டிங் லிரன் நேரத்திற்கு வந்தது. டிங் லிரன் வேகமாக விளையாடிச் சிறப்பாகப் பயன்படுத்தி குகேஷிற்கு அழுத்தத்தைத் தந்தார்.
பிறகு சமமாகச் சென்ற ஆட்டத்தில் குகேஷ்22-வது மூவில் சிறிய தவறாகத் தனது இராணியை Qe1 க்கு நகர்த்தினார்.
அதைச் சிறிதுக் கூடத் தவறவிடாமல் டிங் லிரன் சிறப்பாக விளையாடி குகேஷை அதிகமாக யோசிக்க வைத்து அவரது நேரத்தைக் குறைக்க வைத்தார். முதல் 40 நகர்வுகளுக்கு இன்கிரிமெண்ட் இல்லாததால் குகேஷ் நேர நெருக்கடியை உணர்ந்தார். முதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் போட்டியிலே கடினமானச் சூழலை குகேஷ் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், குகேஷ் தனது 40-வது நகர்வை தனக்கு ஒரு நொடி உள்ளபோது நகர்த்தி நிறைவு செய்தார். போட்டி விதிமுறைபடி 41-வது நகர்விலிருந்து 30 நிமிடங்கள் அவருக்கு வந்தது.
சிறிது கூட குகேஷிற்கு வாய்ப்புத் தராமல் டிங் லிரன் ஆட்டம் முழுவதும் சிறப்பாக ஆடினார். இறுதியில் டிங் லிரனின் சிறப்பான ஆட்டத்தால் குகேஷ் 43-வது நகர்வில் தோல்வியை ஒப்புக்கொண்டு ரிசைன் செய்துச் சென்றார்.
இதன் மூலம் கிராண்ட் மாஸ்டர் டிங் லிரன் ஒரு புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். மீதமுள்ள 13 ஆட்டங்களின் முடிவுகளை கொண்டு உலக சாம்பியன் தேர்வு செய்யப்படுவார். நாளை கருப்பு காய்களை கொண்டு கிராண்ட் மாஸட்ர் குகேஷ் தனது சிறப்பான வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...