சென்னையில் பனிமூட்டம்: விமானம், மின்சார ரயில் சேவை பாதிப்பு!
Zoho : 'AI-ல் கவனம் செலுத்த போகிறேன்...' - சி.இ.ஓ பதவியில் இருந்து விலகும் ஸ்ரீதர் வேம்பு!
இந்தியாவின் குறிப்பிடத்தக்க மென்பொருள் நிறுவனங்களில் ஒன்று ஜோஹோ. இதன் தலைமை செயல் அதிகாரியாக இதுவரை இருந்து வந்தவர் ஸ்ரீதர் வேம்பு. இவர் இந்தியாவின் 39 வது மிகப்பெரிய பணக்காரர் ஆவார். கடந்த 2021 இல் இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது ஜோஹோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகி உள்ளார்.
இது குறித்து தனது X வலைதளத்தில் அவர் கூறுகையில், "ஜோஹோ நிறுவனத்தின் 'தலைமை விஞ்ஞானி' என்ற பொறுப்பை ஏற்று, ஆராய்ச்சி மற்றும் நிறுவன மேம்பாட்டில் கவனம் செலுத்தப் போகிறேன். AI-யின் பயன்பாடுகள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதன் மேம்பாடு மற்றும் முக்கிய சவால்களை கருத்தில் கொண்டு நான் பதவி விலகுறேன். மேலும் எனது தனிப்பட்ட கிராமப்புற மேம்பாட்டு பணியை தொடர்வதோடு மட்டுமல்லாமல் R&D முயற்சிகளில் முழு நேர கவனம் செலுத்துவதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளேன். எனது புதிய வேலையை ஆற்றலுடனும் வீரியத்துடனும் எதிர்நோக்குவேன்.
A new chapter begins today.
— Sridhar Vembu (@svembu) January 27, 2025
In view of the various challenges and opportunities facing us, including recent major developments in AI, it has been decided that it is best that I should focus full time on R&D initiatives, along with pursuing my personal rural development mission.…
தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பை, ஜோஹோ குழுமத்தின் இணை இயக்குனரான 'ஷைலேஷ் குமார் டேவி' ஏற்கிறார். இணை நிறுவனர் 'டோனி தாமஸ்' Zoho US-க்கு தலைமை தாங்கி குழுமத்தை வழி நடத்துவார். மேனேஜ் இன்ஜின் பிரிவிற்கு 'ராஜேஷ் கண்ணன்' அவர்களும், http://zoho.com பிரிவிற்கு 'மணிவேம்பு' அவர்களும் தலைமை தாங்குவார்கள்" எனக் பதிவிட்டுள்ளார்.
ஜோஹோ 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய ஸ்ரீதர் வேம்பு இந்தியாவின் செல்வாக்கு மிக்க தொழில்நுட்ப தொழில் முனைவோர்களில் ஒருவராக கருதப்படுகிறார். 80 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்ட நிறுவனமாக ஜோஹோ நிறுவனம் உருவாவதற்கு இவரின் பங்கு மிகப் பெரியது ஆகும்.