Zohran: நியூ யார்க் மேயர் தேர்தலில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சொஹ்ரான் மம்தானி! - யார் இவர்?
நியூ யார்க் மேயர் தேர்தலில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சொஹ்ரான் மம்தானி போட்டியிட தேர்வாகி இருக்கிறார்.
நியூ யார்க் மேயர் தேர்தல் வரும் நவம்பர் 4 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியின்றி கர்டிஸ் ஸ்லிவா தேர்வு செய்யப்பட்டிருந்தார். தற்போது ஜனநாயகக் கட்சி சார்பில் சொஹ்ரான் மம்தானி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

சொஹ்ரான் மம்தானி உகண்டாவின் கம்பாலாவில் 1991 ஆம் ஆண்டு பிறந்தவர் சொஹ்ரான் மம்தானி. ‘சலாம் பாம்பே’, ‘மான்சூன் வெட்டிங்’ போன்ற பிரபல திரைப்படங்களை இயக்கிய மிரா நாயரின் மகன்தான் சொஹ்ரான் மம்தானி. இவரது அப்பா குஜராத் வம்சாவளியைச் சேர்ந்தவர். அம்மா பஞ்சாப் வம்சா வளியைச் சேர்ந்தவர்.
போடோயின் கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பை படித்து முடித்திருக்கிறார். பாலஸ்தீன் நீதிக்கான மாணவர்கள் என்ற அமைப்பை நிறுவி இருக்கிறார்.

மலிவு விலை வீடுகள், பொது போக்குவரத்து மற்றும் புலம்பெயர்ந்தோர் உரிமைகள் ஆகியவற்றுக்காக தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நியூ யார்க் மேயராக சொஹ்ரான் தேர்வானால், முதல் முஸ்லிம் மற்றும் இந்திய - அமெரிக்க மேயர் என்ற வரலாறு உருவாகும்.