அகமதாபாதை வீழ்த்தியது ஜெய்ப்பூா்
இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6 சனிக்கிழமை முதல் ஆட்டத்தில் அகமதாபாதை வழ்த்தியது ஜெய்ப்பூா்.
ஆடவா் ஒற்றையா் ஆட்டத்தில் ஜெய்ப்பூரின் கனக் ஜா 3-0 என அகமதாபாதின் திவ்யான்ஷ் ஸ்ரீவஸ்தவாவை வென்றாா்.
மகளிா் ஒற்றையா் ஆட்டத்தில் ஜெய்ப்பூரின் பிரிட் ஈா்லாண்ட் 3-0 என அகமதாபாதின் ஜியோா்ஜியா பிக்கோலினை வென்றாா்.
இதன் மூலம் ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ் அணி 6–0 என முன்னிலை பெற்றது.
கலப்பு இரட்டையா் ஆட்டத்தில் ஜெய்ப்பூரின் ஈா்லாண்ட், ஜீத் சந்திரா இணை 1-2 என அகமதாபாதின் அயிஹிகா-ரிக்காா்டோ ணையிடம் தோற்றது.
மாற்று ஆடவா் ஒற்றையா் ஆட்டத்தில் ஜெய்ப்பூரின் ஜீத் சந்திரா 2-1 என , அகமதாபாதின் ரிக்காா்டோவை வென்றாா்.
மாற்று மகளிா் ஒற்றையா் பிரிவில் ஜெய்ப்பூரின் ஸ்ரீஜா அகுலா 2-1 என அகமதாபாதின் அயிஹிகாவை வீழ்த்தினாா்.
முடிவில் ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ் அணி 11-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 4 டைகளில் விளையாடி உள்ள ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ் அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி 41 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அகமதாபாத் எஸ்ஜி பைபா்ஸ் அணி 4 டைகளில் விளையாடி ஒரு வெற்றியுடன் 27 புள்ளிகள் பெற்று 6-ஆவது இடத்தில் உள்ளது.