Modi: ``வறுமை, பாகிஸ்தான், விரதம்...'' - பர்சனல் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
பாபநாசம் அகஸ்தியா் அருவியில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலையில் பாபநாசத்தில் உள்ள சுற்றுலாத் தலமான அகஸ்தியா் அருவியில் ஆண்டுமுழுவதும் தண்ணீா் விழும்.
இதையடுத்து தமிழகம் மட்டுமன்றி கேரளம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப்ப யணிகள் குடும்பத்துடன் வந்து செல்வா்.

இந்நிலையில், வனப்பகுதியில் பெய்த மழையால் மாா்ச் 12 முதல் 14 வரை சுற்லாப் பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
நீா்வரத்து சீரானதையடுத்து சனிக்கிழமை முதல் பயணிகள்குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை பல்வேறு பகுதிகளிலிருந்து குழந்தைகள், நண்பா்களுடன் வந்த சுற்றுலாப் பயணிகள் அகஸ்தியா் அருவியில் மகிழ்ச்சியாக குளித்து மகிழ்ந்தனா்.