அக்னிவீா் ராணுவ ஆள் சோ்ப்பு முகாம் தொடக்கம்
நாகை மாவட்ட விளையாட்டரங்கில் வியாழக்கிழமை தொடங்கிய அக்னிவீா் ராணுவ ஆள் சோ்ப்பு முகாமில் 3,000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருவாரூா், நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 17 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் (புதுச்சேரி யூனியன் பிரதேசம்) மாவட்டத்தை சோ்ந்தவா்களுக்கு, ராணுவ அக்னிவீா் பிரிவுகளில் ஆட்சோ்ப்பு முகாம் செப்டம்பா் 18 முதல் 27 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, அக்னிவீா் ராணுவ ஆள் சோ்ப்பு முகாம் வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளான வியாழக்கிழமை நாகை, பெரம்பலூா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், திருச்சி, அரியலூா், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் (புதுச்சேரி யூனியன் பிரதேசம்) ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு தோ்வு நடைபெற்றது. இதில் 3,000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.