செய்திகள் :

அஞ்சல் துறையை நினைவூட்டி பெற்றோர்களுக்கு கடிதம் எழுதிய மாணவ, மாணவிகள்!

post image

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு தென்காசி மழலையர் பள்ளியில் மாணவ, மாணவிகள் தாங்களாகவே கடிதம் எழுதி தங்களது பெற்றோர்களுக்கு தபால் மூலம் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9ஆம் தேதி உலக அஞ்சல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாக நமது அன்பு, பாசம், நட்பு உள்ளிட்ட தகவல்களையும் தெரிவிப்பதற்கு தபால் சேவை அவசியமான ஒன்றாகவும் இருந்து வந்தது.

தபால் சேவை
தபால் பெட்டி

நமது காதலை சுமந்து சென்ற காதலர்களிடம் சேர்த்த ஒரு மிகப்பெரிய காதல் பாலமாக இருந்த கடிதத்தை தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மறந்து விட்டோம்.

தற்போது தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சமூக வலைதளம் வாயிலாக தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.

இருந்தாலும் அஞ்சல் சேவை குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் தென்காசி மாவட்டம் மேலகரம் பகுதியில் அமைந்துள்ள லிட்டில் ஹாட்ஸ் மழலையர் பள்ளியில் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதி அதனை தபால் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தபால்
தபால் பெட்டியுடன் மாணவி

இதில் ஒவ்வொரு மாணவ மாணவிகளும் தங்களது பெற்றோர்களுக்கு தாங்களாகவே கடிதத்தில் தங்களது அன்பை எழுதியதுடன் தபால் பெட்டியில் பெற்றோர்களுக்கு தங்களது கடிதத்தை அனுப்பி வைத்தனர்.

அந்த வகையில் மாணவர்கள் தபால் மற்றும் கடிதம் எழுதும் முறை குறித்து அறிந்துகொள்ளவும், கடிதம் எழுதும் திறனை ஊக்குவிக்கும் விதமாகவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" - கலாட்டா குரு

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவை முதல் முறையாக நடத்தியிருக்கிறது விகடன்.`Best Solo Creator - Male', `Bes... மேலும் பார்க்க

Vikatan Digital Awards: "பிடிச்சத பண்ணதால இப்போ விகடன் விருதைப் பிடிச்சிருக்கேன்" மைக்செட் ஶ்ரீராம்

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவை முதல் முறையாக நடத்தியிருக்கிறது விகடன்.`Best Solo Creator - Male', `Bes... மேலும் பார்க்க

Vikatan Digital Awards 2025: "சிம்பு, வெற்றிமாறனின் எந்தப் படத்தைப் பார்த்தாலும்..." - டி.ராஜேந்தர்

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவை முதல் முறையாக நடத்துகிறது விகடன்.`Best Solo Creator - Male', `Best Solo... மேலும் பார்க்க

Vikatan Digital Awards: "‘பொல்லதவன்’ படத்தின்போதே சிம்புவுடன் பேசிக்கிட்டிருந்தேன்" -வெற்றிமாறன்

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவை முதல் முறையாக நடத்துகிறது விகடன்.`Best Solo Creator - Male', `Best Solo... மேலும் பார்க்க

Vikatan Digital Awards 2025 - ’’உடைஞ்ச மிக்ஸி ஜார்ல சேமிக்க ஆரம்பிச்சேன்’’ - ஹரீஷ் உருக்கம்!

டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவை முதல் முறையாக நடத்துகிறது விகடன்.`Best Solo Creator - Male', `Best Solo... மேலும் பார்க்க

Vikatan Digital Awards: " 'அமைதிப்படை' ஓ.பி.எஸ், 'தில்லாலங்கடி' உதயநிதி" - ஜெயக்குமார் கலகல