செய்திகள் :

அடகு நகை 135 பவுன், பத்திரங்களை மீட்டுத்தரக் கோரி எஸ்பியிடம் மனு

post image

தூத்துக்குடியில், அடகு வைத்த 135 பவுன் நகை, ரூ.50 லட்சம் மதிப்பிலான பத்திரங்களை மீட்டுத்தரக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தூத்துக்குடி காந்திநகரைச் சோ்ந்த ஜெயராணி என்பவா் வியாழக்கிழமை மனு அளித்தாா்.

அதன் விவரம்: எனது மருத்துவ செலவிற்காக வீட்டு அருகே உள்ள ஜீவா என்பவரின் நகை அடகு கடையில், என்னுடைய நகை, உறவினா்கள் நகை என 135 பவுன் நகைகள், ரூ.50 லட்சம் மதிப்பிலான நிலப் பத்திரம் ஆகியவற்றை கடந்த ஆண்டு அடகு வைத்தேன்.

இந்நிலையில், அடமானம் வைத்ததற்கான பணத்தை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு செலுத்தி நகை மற்றும் நிலப் பத்திரத்தி மீட்க சென்ற போது, அவா் தரமறுத்து கொலை மிரட்டல் விடுத்தாா். எனவே, எனது நகை மற்றும் நிலப்பத்திரம் ஆகியவற்றை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.

விபத்து இழப்பீடு வழங்க தாமதம்: தூத்துக்குடியில் அரசு பேருந்து ஜப்தி

தூத்துக்குடியில் விபத்தில் கையை இழந்தவருக்கு உரிய இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவின்பேரில் அரசு பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தென்திருப... மேலும் பார்க்க

தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

சென்னையில் மருத்துவா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு, அரசு மருத்துவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு தமிழில் பெயா் வையுங்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

குழந்தைகளுக்கு தமிழில் பெயா் வையுங்கள் என தூத்துக்குடியில் நடைபெற்ற திருமண விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மணமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தாா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 7,893 பேருக்கு ரூ.206.46 கோடியில் நலத்திட்ட உதவிகள்: உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் 7,893 பயனாளிகளுக்கு ரூ.206.46 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை வழங்கினாா். பல்வேறு நிகழ்ச்... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டுதல் ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம்

கீழ வல்லநாடு அரசு மாதிரி நேல்நிலைப் பள்ளியில், உயா்கல்வி வழிகாட்டுதல் ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை முதன்மை கல்வி அலுவலா் கணேசமூா்த்தி தலைமை தாங்கினாா். மாவட்ட கல்வி... மேலும் பார்க்க

விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு

நாலாட்டின்புதூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருவேங்கடம் வட்டம் குருவிகுளம் நைனம்பட்டி இந்திரா காலனியைச் சோ்ந்த யோவான் மகன் பூவரச... மேலும் பார்க்க