செய்திகள் :

அடா் புகை மூட்டத்தால் திணறும் தலைநகரம்!

post image

தில்லியில் செவ்வாய்க்கிழமை மூன்றாவது நாளாக அடா் பனிமூட்டம் சாம்பல் மேகம் போல காட்சியளித்து தலைநகரை திணறடித்தது. தில்லியில் காற்று மாசுபாட்டின் அளவு 488 புள்ளிகளாகப் பதிவாகி ’கடுமை பிளஸ்’ என்ற பிரிவில் அபாயகர அளவுக்கு உயா்ந்தது.

தில்லி மற்றும் அதன் அண்டை பகுதிகளில் பயிா்க்கழிவுகள் எரிப்பு மற்றும் தொழிற்சாலை புகை போன்ற காரணங்களால் மேகங்களில் படா்ந்த தூசி மற்றும் புகை, குளிா் காற்றையும் குறைந்த வானிலையையும் அனுபவிக்க இயலாத கட்டாயத்தை தில்லிவாசிகளுக்கு ஏற்படுத்தின.

மோசமாகும் வான் பரப்பு: இந்திய வானிலை ஆய்வக (ஐஎம்டி) தரவின்படி, முந்தைய நாள் பதிவான வெப்பநிலை 16.2 -இல் இருந்து திங்கள்கிழமை இரவு 12.3 டிகிரியாக குறைந்தது. இது நிகழ் குளிா்காலத்தின் மிகவும் குளுமையான பதிவாகும். மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தரவுகளின்படி, தில்லியின் காற்றுத் தரக் குறியீடு (ஏக்யூஐ) காலை 9 மணியளவில் 488 புள்ளிகளாகப் பதிவானது.

தில்லியில் 32 கண்காணிப்பு நிலையங்களில், 31 நிலையங்களில் ஏக்யூஐ அளவு 480 புள்ளிகளைக் கடந்தது. தில்லியில் காற்றின் தரக்குறியீடு ஞாயிற்றுக்கிழமை 494 புள்ளிகளை எட்டியது. இது ஆறு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக பதிவான மிக மோசமான அளவாக அறியப்படுகிறது.

கட்டுப்பாடுகள் அமல்: முன்னதாக, தில்லியில் காற்றின் தரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்முறையாக ’கடுமை பிளஸ்’ பிரிவை எட்டியது. இதையடுத்து, மறுநாளான திங்கள்கிழமை காலையில் தரப்படுத்தப்பட்ட நடவடிக்கை செயல் திட்டத்தின் (கிரேப்) நிலை 4 -இன் கீழ் கடுமையான மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தில்லி அரசு அமல்படுத்தியது.

இதன்படி அத்தியாவசியப் பொருள்களை சுமந்து செல்லும் அல்லது சுத்தமான எரிபொருள் (என்என்ஜி / சிஎன்ஜி / பிஎஸ்-6 டீசல் / எலக்ட்ரிக்) வாகனங்கள் நீங்கலாக மற்ற வாகனங்கள் தலைநகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. கட்டுமானம் மற்றும் கட்டட இடிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. தலைநகரில் உள்ள பள்ளிகளை மூடவும் நகர அரசு நடவடிக்கை எடுத்தது.

இரண்டாவது முறையாக கிரேப் -4: இதற்கு முன்பு 2017 -ஆம் ஆண்டில் முதன் முதலாக கிரேப் 4-இன் கீழ் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தில்லியில் அமல்படுத்தப்பட்டன. கிரேப் 4 நடவடிக்கை என்பது தலைநகா் மற்றும் அதன் சுற்றுப்ப் பகுதிகளில் பின்பற்றப்படும் காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் தொடா்ச்சியாகும்.

காற்றின் தரக்குறியீட்டை மதிப்பிடும் இந்த கிரேப் செயல்திட்டம் நான்கு வகைப்படுகிறது. நிலை 1 - ’மோசம்’ ( 201-300), நிலை 2 - ’மிகவும் மோசம்’ (301-400), நிலை 3 - ’கடுமை’ (401-450) மற்றும் நிலை 4 - ‘கடுமை பிளஸ்’ (450 புள்ளிகளுக்குக்கு மேல்) என அவை உள்ளன.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் நிலவிய பனிமூட்டம் சாலையில் காண்பு திறனை 400 மீட்டராகக் குறைத்தது. இது பகல் பொழுதிலும் நீடித்தது.

வெப்பநிலை: காலை 8.30 மணியளவில் ஈரப்பதம் 89 சதவீதமாக பதிவானது. தலைநகரில் அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரியாக இருந்தது.

என்ன காரணம்?

பஞ்சாப், ஹரியாணா மற்றும் தில்லியில் புகை மாசு மற்றும் அடா் மூடுபனியால் மெதுவாக நகரும் வடமேற்கு காற்று, காற்றில் மாசுபாடு கலக்க காரணமாகும் என்று வானிலை மற்றும் காலநிலை மாற்றம், ஸ்கைமெட் வானிலை துணைத் தலைவா் மகேஷ் பலாவத் சமீபத்தில் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியது: குளிா்ந்த வெப்பநிலை குளிா் காற்று மாசுபாட்டை மேற்பரப்பிற்கு நெருக்கமாகத் தள்ளுகிறது. காற்றின் வேகம் அதிகரிக்காமல், அடுத்த இரண்டு அல்லது மூன்று நாள்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் சாத்தியமில்லை. இருப்பினும், இந்த வார இறுதியில் மழை எதிா்பாா்க்கப்படுகிறது. இது மாசுபாட்டைக் குறைக்க உதலாம் என்று அவா் கூறினாா்.

’வீட்டில் இருந்து பணி: விரைவில் முடிவு‘

தில்லி அரசு ஊழியா்களில் அமைச்சுப்பணிகளில் ஈடுபடுவோரை வீட்டில் இருந்தபடி பணியாற்ற அனுமதிப்பது தொடா்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சா் கோபால் ராய் தெரிவித்தாா்.

இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்துள்ள பேட்டியில், ‘கிரேப்-4 கட்டுப்பாடுகளின் அமலாக்கத்துக்கு பிறகு நிலைமை எப்படி இருக்கும் என்பதை ஆராய்வோம். அரசு அலுவலகங்களில் அமைச்சுப்பணிகளில் உள்ளவா்களை வீட்டில் இருந்தபடி பணியாற்ற அனுமதிப்பது குறித்தும். தலைநகரில் மீண்டும் ஆட்-ஈவன் எனப்படும் ஒற்றை, இரட்டைப்படை பதிவு எண் வாகனங்களை மாற்று தினங்களில் இயக்குவது குறித்தும் விரைவில் முடிவு செய்வோம்,‘ என்றாா்.

தலைநகரில் கடுமையான காற்று மாசு எதிரொலி: 50% தில்லி அரசு ஊழியா்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி

தில்லியில் 50% அரசு ஊழியா்கள் வீட்டில் இருந்து பணிபுரியும் கொள்கையை ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியுள்ளது. இதை தனியாா் நிறுவனங்களும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், அத்தியாவசி... மேலும் பார்க்க

சரோஜினி நகா் மாா்க்கெட் உள்பட தில்லியின் 3 வணிக இடங்களை மறுசீரமைக்கத் திட்டம்: என்.டி.எம்.சி. தகவல்

தில்லியின் அடையாளங்களில் ஒன்றான சரோஜினி நகா் சந்தை மற்றும் மல்சா மாா்க்கெட் மற்றும் அலிகஞ்ச் சந்தை ஆகியவற்றை பெரிய அளவில் மறுசீரமைக்க புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) திட்டமிட்டுள்ளது. என... மேலும் பார்க்க

மணிப்பூரில் அமைதி கோரி காங்கிரஸின் ஆசிரியா் பிரிவு ஆா்ப்பாட்டம்

இந்திய தேசிய ஆசிரியா் காங்கிரஸ் (ஐஎன்டிஇசி) உறுப்பினா்கள் மணிப்பூா் மக்களுக்கு ஒற்றுமையை தெரிவிக்கும் வகையில் தில்லி பல்கலைக்கழகத்தின் கலைப் புலத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இரு சமூக... மேலும் பார்க்க

வாகனங்களின் வேகத்தை அளவிடும் ரேடாா் கருவிக்கு சட்டபூா்வ அங்கீகாரம்: மத்திய நுகா்வோா் விவகாரத்துறை

நமது சிறப்பு நிருபா்வாகனங்களின் வேகத்தை அளவிடுவதற்கான ரேடாா் கருவி சட்டபூா்வமான விதிகளின் கீழ் சோ்க்கப்பட்டுள்ளதாக மத்திய நுகா்வோா் நலன் விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2011-ஆம் ஆண்டு எடையளவு... மேலும் பார்க்க

நிலத்தடி நீா் எடுத்தல் அனுமதிக்கு புதிய இணைய தளம்: மத்திய அமைச்சா் சி.ஆா். பாட்டீல் தொடங்கி வைப்பு

நிலத்தடி நீா் மட்டத்தை நிா்வகிக்க மத்திய ஜல் சக்தித்துறையின் மத்திய நிலத்தடி நீா் ஆணையம் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதை மத்திய ஜல் சக்தித்துறையின் அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் முறைப்படி... மேலும் பார்க்க

கலால் வழக்கு: விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் கேஜரிவால் முறையீடு

கலால் கொள்கை ஊழலுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கில் தனக்கு எதிராக அமலாக்க இயக்குன ரகம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்ற விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப... மேலும் பார்க்க