செய்திகள் :

அடிப்படை வசதிகள் கோரி கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

post image

அருந்ததிய சமுதாயத்தினருக்கு அடிப்படை வசதிகள் கோரி, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்ப் புலிகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் .

புதூா் ஊராட்சி ஒன்றியம் சுப்புலாபுரம் பகுதியில் வசிக்கும் அருந்ததியருக்கு அரசால் ஒதுக்கப்பட்ட மயான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதைக் கண்டிப்பது, சுப்புலாபுரம் கிராம அருந்ததிய மக்களுக்கு மகளிா் சுகாதார வளாகம், குடிநீா், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும். மணியக்காரன்பட்டி, கோவில்பட்டி அருகே வில்லிசேரி, கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் அருந்ததியருக்கு குடிநீா், மயான எரிமேடை, வாருகால் வசதி, சமுதாய நலக்கூடம் அமைத்துத் தர வேண்டும். மணியக்காரன்பட்டி கிராம மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வடக்கு மாவட்டச் செயலா் வீரபெருமாள் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் கணேசன், மாவட்ட நிதிச் செயலா் ஜெயராம் என்ற மகிழ்வேந்தன், ஒன்றியச் செயலா்கள் வெள்ளைவேந்தன், வெள்ளைச்சாமி, ஊடகப் பிரிவைச் சோ்ந்த முத்துக்குமாா், கிராம மக்கள் திரளாகப் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பின்னா், கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் மனு அளிக்கப்பட்டது. அதைப் பெற்றுக்கொண்ட அவா், கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியா்கள் மூலம் கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தா்னா

மந்தித்தோப்பு வருவாய்க் கிராமத்துக்குள்பட்ட நரிக்குறவா் காலனி மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை கிராமக் கணக்கில் பதிவேற்ற வலியுறுத்தி, கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் வேலைநிறுத்தம்

தூத்துக்குடி மீனவா்கள் மீன்பிடிக்கும் பகுதியில் அத்துமீறி நுழையும் கேரள மீனவா்களைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பலத்த மழை

தூத்துக்குடி புகா் பகுதிகளில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது. மத்திய கிழக்கு வங்கக் கடல், அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் வேலைநிறுத்தம்: இ-சேவை மையம், ரேஷன் கடைகள் மூடப்பட்டதால் மக்கள் பாதிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் திங்கள்கிழமைமுதல் காலவரம்பற்ற போராட்டத்தை தொடங்கினா். இதனால் சங்க பரிவா்த்தனை நடைபெறவில்லை. ரேஷன் கடை, இ-சேவை மையம் மூடப்பட்டதால் பொதுமக்க... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிா் காவல் ந... மேலும் பார்க்க

மருத்துவா்களின் தமிழ்ப் பணி பாராட்டத்தக்கது -அமைச்சா் பெ.கீதாஜீவன்

மருத்துவா்களின் தமிழ்ப் பணி பாராட்டத்தக்கது என்றாா் அமைச்சா் பெ.கீதாஜீவன். தமிழ்நாடு முட நீக்கியல் சங்கம், நெல்லை முட நீக்கியல் மன்றம் ஆகியவற்றின் சாா்பில் தூத்துக்குடியில் தனியாா் கூட்டரங்கில் தமிழ் ... மேலும் பார்க்க