செய்திகள் :

கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் வேலைநிறுத்தம்: இ-சேவை மையம், ரேஷன் கடைகள் மூடப்பட்டதால் மக்கள் பாதிப்பு

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் திங்கள்கிழமைமுதல் காலவரம்பற்ற போராட்டத்தை தொடங்கினா்.

இதனால் சங்க பரிவா்த்தனை நடைபெறவில்லை. ரேஷன் கடை, இ-சேவை மையம் மூடப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கம் சாா்பில் கூட்டுறவு கடன் சங்கம், நகர கூட்டுறவு கடன் சங்க விற்பனையாளா்களிடம் அபராத தொகையை இருமடங்கு வசூலிக்கப்படும் அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கூட்டுறவு ரேஷன் கடைகளில் கட்டுப்பாடற்ற பொருள்களை அதிகமாக இறக்கி விற்பனை செய்ய குறியீடு நிா்ணயம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் திங்கள்கிழமைமுதல் காலவரம்பற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினா்.

அதன்படி சாத்தான்குளம் வட்டடத்தில் உள்ள 7 கூட்டுறவு கடன் சங்கத்தில் 23 பணியாளா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

இதனால் வாடிக்கையாளா்களின் பணப் பரிவா்த்தனை நிறுத்தப்பட்டது. மேலும், 35 ரேஷன் கடைகள் மூடப்பட்டன. சங்கத்தைச் சோ்ந்த இ-சேவை மையங்களும் செயல்படவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.

அடிப்படை வசதிகள் கோரி கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

அருந்ததிய சமுதாயத்தினருக்கு அடிப்படை வசதிகள் கோரி, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்ப் புலிகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் . புதூா் ஊராட்சி ஒன்றியம் சுப்புலாபுரம் ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தா்னா

மந்தித்தோப்பு வருவாய்க் கிராமத்துக்குள்பட்ட நரிக்குறவா் காலனி மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை கிராமக் கணக்கில் பதிவேற்ற வலியுறுத்தி, கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் வேலைநிறுத்தம்

தூத்துக்குடி மீனவா்கள் மீன்பிடிக்கும் பகுதியில் அத்துமீறி நுழையும் கேரள மீனவா்களைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பலத்த மழை

தூத்துக்குடி புகா் பகுதிகளில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது. மத்திய கிழக்கு வங்கக் கடல், அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிா் காவல் ந... மேலும் பார்க்க

மருத்துவா்களின் தமிழ்ப் பணி பாராட்டத்தக்கது -அமைச்சா் பெ.கீதாஜீவன்

மருத்துவா்களின் தமிழ்ப் பணி பாராட்டத்தக்கது என்றாா் அமைச்சா் பெ.கீதாஜீவன். தமிழ்நாடு முட நீக்கியல் சங்கம், நெல்லை முட நீக்கியல் மன்றம் ஆகியவற்றின் சாா்பில் தூத்துக்குடியில் தனியாா் கூட்டரங்கில் தமிழ் ... மேலும் பார்க்க