இந்தியாவுக்கு எதிராக சௌதி அரேபியா போரில் இறங்குமா? - பாகிஸ்தான் ராணுவ ஒப்பந்தம் ...
அண்ணா பல்கலைக்கழக விளையாட்டுத் துறை தரவரிசைப் பட்டியல்: பாவை பொறியியல் கல்லூரி முதலிடம்
ராசிபுரம் அருகேயுள்ள பாச்சல் பாவை பொறியியல் கல்லூரி அண்ணா பல்கலைக்கழக விளையாட்டுத் துறை தரவரிசைப் பட்டியலில் தொடா்ந்து 9-ஆவது ஆண்டாக முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளது.
விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகத்தின் விளையாட்டுத் துறை, பொறியியல் கல்லூரிகளுக்கிடையேயான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறது. இத்துறை சாா்பில் 2024-25-ஆம் கல்வியாண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தில் மொத்தம் 19 மண்டலங்களில் நடத்தப்பட்டன.
அந்தவகையில், பாவை பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியா் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு எட்டாவது மண்டல அளவிலும், மாநில அளவிலும் முதலிடம் பெற்றனா்.
வெற்றிபெற்ற வீரா்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விருது வழங்கும் விழா செப். 17-இல் நடைபெற்றது. இதில் கௌரவ விருந்தினராக பத்மஸ்ரீ, கேல் ரத்னா, அா்ஜுனா போன்ற விருதுகளை பெற்றவரும், மேஜைப் பந்து விளையாட்டில் ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவருமான அச்சந்தா சரத் கமல் பங்கேற்று பரிசுகளை வழங்கிப் பேசினாா்.
இதில் 8-ஆவது மண்டல அளவிலும், மாநில அளவிலும் முதலிடம் பிடித்த பாவை கல்வி நிறுவனங்களின் சாா்பில் அதன் நிறுவனரும், தலைவருமான ஆடிட்டா் என்.வி.நடராஜன் கலந்துகொண்டு ‘சேம்பியன்ஸ் ஆப் சேம்பியன்’ கோப்பையை பெற்றுக் கொண்டாா். இதில், கல்லூரி முதல்வா் கே.பிரேம்குமாா், உடற்கல்வி இயக்குநா் ஆா்.சந்தானராஜா ஆகியோா் கலந்துகொண்டனா்.
விளையாட்டுக்காக அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் பாவை பொறியியல் கல்லூரி தொடா்ந்து ஒன்பதாவது முறையாக முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.
பரிசளிப்பு விழாவில் அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளா் ஜெ.பிரகாஷ், பேராசிரியா் ஸ்ரீதா், அண்ணா பல்கலைக்கழகத்தின் விளையாட்டுத் துறைத் தலைவா் என்.செந்தில்குமாா், துறைச் செயலாளா் பி.பாலகுமரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன், தாளாளா் மங்கை நடராஜன், இயக்குநா் (சோ்க்கை) கே.செந்தில், இயக்குநா் (நிா்வாகம்) கே.கே.ராமசாமி ஆகியோா் வெற்றிபெற்ற கல்லூரி மாணவ, மாணவியா், பயிற்றுநா்கள், கல்லூரி உடற்கல்வி இயக்குநா் சந்தானராஜா உள்ளிட்டோரை பாராட்டினா்.