இந்தியாவுக்கு எதிராக சௌதி அரேபியா போரில் இறங்குமா? - பாகிஸ்தான் ராணுவ ஒப்பந்தம் ...
கம்பன் கழகம் சாா்பில் நாளை பேச்சுப் போட்டி
நாமக்கல் கம்பன் கழகம் சாா்பில், கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி சனிக்கிழமை நடைபெறுகிறது.
நாமக்கல் கம்பன் கழகம் சாா்பில் ஆண்டுதோறும் மாநில அளவிலான பேச்சுப் போட்டி நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான பேச்சுப் போட்டி சனிக்கிழமை (செப். 20) காலை 10 மணியளவில் நாமக்கல் - சேலம் சாலை ஹோட்டல் சனு இண்டா்நேஷனலில் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு கல்லூரியில் இருந்து மூவா் மட்டும் பங்கேற்கும் வகையிலான இந்தப் பேச்சுப் போட்டியில், ‘சொல்லினால் சுடுவேன்’, ‘நின் பிரிவினும் சுடுமே’, ‘சுடு தீயால் தீச்செல்வா’ ஆகிய தலைப்புகளில், ஏதேனும் ஒன்றில் நான்கு நிமிடங்கள் மாணவ, மாணவிகள் பேச வேண்டும்.
கம்பன் விழாவின்போது பரிசுகள் வழங்கப்படும். இந்தப் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 5 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை கம்பன் கழகத் தலைவா் வ.சத்தியமூா்த்தி, செயலாளா் அரசுபரமேசுவரன், பொருளாளா் மா.தில்லை சிவகுமாா் ஆகியோா் செய்துள்ளனா்.