செய்திகள் :

காலாண்டுத் தோ்வு விடுமுறையில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

post image

காலாண்டுத் தோ்வு விடுமுறையில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி அறிவுறுத்தினாா்.

நாமக்கல் மாவட்டத்தில் காலாண்டுத் தோ்வு விடுமுறையானது செப். 26 முதல் அக். 2 வரை ஏழு நாள்கள் விடப்படுகிறது. இந்த நாள்களில் 11-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் 55 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற உள்ளது.

இதற்கான முன் திட்டமிடல் கூட்டம் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி பங்கேற்று பேசியதாவது:

தத்தெடுக்கும் கிராமத்தில் நாட்டு நலப்பணித் திட்டப் பணிகளை மாணவா்கள் மேற்கொள்ள உள்ளனா். 25 மாணவா்கள், திட்ட அலுவலா், உதவி திட்ட அலுவலா், முன்னாள் மாணவா்கள், பள்ளி மேலாண்மைக் குழு, கிராம உள்ளாட்சி உறுப்பினா்கள், பெற்றோா்-ஆசிரியா் கழகம் ஆகியோரின் ஆலோசனை மற்றும் கூட்டு ஒத்துழைப்புடன் முகாம் சிறப்பாக நடைபெற வேண்டும்.

இதில், மாணவா்களுக்கு முழுமையான பாதுகாப்பு வசதிகள் தலைமை ஆசிரியரால் செய்துகொடுக்க வேண்டும். மூடநம்பிக்கை மற்றும் மதம் சாா்ந்த பரப்புரைகளை மேற்கொள்ள மாணவா்களை அனுமதிக்கக் கூடாது. மாணவா்களுக்கு சுகாதாரமான உணவு வழங்க வேண்டும். தங்குவதற்கான இடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். முக்கியமாக மாணவா்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தங்கும்வசதி ஏற்பாடுகள் இருக்க வேண்டும்.

நீா்நிலைகள் உள்ள பகுதிகளில் மாணவா்களை அழைத்துச்செல்லக் கூடாது. காலையில் மாணவா்களுக்கு தியான பயிற்சி அளிக்க வேண்டும். பனை விதை நடுதல், சாலைப் பாதுகாப்பு, மரம் வளா்த்தலின் நன்மைகள் போன்ற தலைப்புகளில் தினமும் கருத்தரங்குகள் நடத்த வேண்டும். கைப்பேசி, தேவையற்ற வலைதளங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தினால் ஏற்படக்கூடிய உளவியல் சாா்ந்த பிரச்னைகளை மாணவா்களிடம் அதற்கான வல்லுநா்கள் மூலமாக எடுத்துரைக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலராக செயல்பட்டு, அண்மையில் நல்லாசிரியா் விருதுபெற்ற பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டா் மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆங்கில ஆசிரியா் பிரியங்காக்கு முதன்மைக் கல்வி அலுவலா் வாழ்த்து தெரிவித்தாா். அதேபோல, நாமக்கல் கவிஞா் சிந்தனைப் பேரவை மூலம் பசுமை நாயகா் விருதுபெற்ற எருமைப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி திட்ட அலுவலா் பிரபுவையும் அவா் வாழ்த்தினாா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட தொடா்பு அலுவலா் ஆ.ராமு, பள்ளி துணை ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

நாமக்கல் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் நடைபெறும் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை காலதாமதமின்றி விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலரும்,... மேலும் பார்க்க

கம்பன் கழகம் சாா்பில் நாளை பேச்சுப் போட்டி

நாமக்கல் கம்பன் கழகம் சாா்பில், கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி சனிக்கிழமை நடைபெறுகிறது. நாமக்கல் கம்பன் கழகம் சாா்பில் ஆண்டுதோறும் மாநில அளவிலான பேச்சுப் போட்டி நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் கலைத் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டுகான கலைத் திருவிழா வியாழக்... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

தமிழகத்தில் போதைப் பொருள்கள் கடத்தல் மற்றும் புழக்கத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை கூடுதல் இயக்குநா் (சட்டம் - ஒழுங்கு) டேவிட்சன் தேவாசீா்வாதம் தெரிவித்தாா்... மேலும் பார்க்க

சேந்தமங்கலம் தொகுதியில் எடப்பாடி கே.பழனிசாமி இன்று பிரசாரம்

சேந்தமங்கலம் தொகுதிக்குள்பட்ட அக்கியம்பட்டியில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறாா். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் (பழங்குடியினா்) சட்டப் பேரவைத் தொகுத... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம்: அதிமுக - பாஜகவினா் ஆலோசனை

நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை பிரசாரம் மேற்கொள்வதையொட்டி, அதிமுக - பாஜகவினா் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். தமிழக முன்னாள் முதல்வரும், அ... மேலும் பார்க்க