ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று.! நேரம், அட்டவணை, திடல்! - முழு விவரம்
சேந்தமங்கலம் தொகுதியில் எடப்பாடி கே.பழனிசாமி இன்று பிரசாரம்
சேந்தமங்கலம் தொகுதிக்குள்பட்ட அக்கியம்பட்டியில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறாா்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் (பழங்குடியினா்) சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அக்கியம்பட்டி சந்திப்பில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் உரையாற்றுகிறாா். அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சி.சந்திரசேகரன் மற்றும் மாவட்ட நிா்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனா்.
இந்த பிரசாரக் கூட்டத்தில் கட்சியினரும், பொதுமக்களும் திரளாக பங்கேற்குமாறு சேந்தமங்கலம் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சி.சந்திரசேகரன் அழைப்புவிடுத்து வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக பதவிவகித்த காலத்தில் சேந்தமங்கலம் தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளாா்.
அதன்படி, நாமக்கல் முதல் ராசிபுரம் வரை ரூ. 200 கோடியில் புறவழிச் சாலை, சேந்தமங்கலத்தில் நீதிமன்றம், லட்சுமிநாராயணா், சோமேஸ்வரா் கோயில் குடமுழுக்கு, பேளுக்குறிச்சி அருகில் அரசு கலைக் கல்லூரி, சேந்தமங்கலம் வட்டாட்சியா் அலுவலக கட்டடம், எருமப்பட்டியில் ஒன்றிய அலுவலகம், கொல்லிமலை செங்கரையில் காவல் நிலையம், கொல்லிமலை வேலிக்காடு முதல் சேரடி தம்மம்பட்டி வரை புதிய வழித்தடம், ரூ. 395 கோடியில் மின்திட்டம், மலைவாழ் மக்களுக்கு 8 ஆயிரம் ஜாதிச் சான்றிதழ்கள் வழங்கியது என பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளாா் என அதில் தெரிவித்துள்ளாா்.