கும்பமேளாவுக்கு முஸ்லிம் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! 11ஆம் வகுப்பு மாணவர் கைது!
அதுல் சுபாஷ் தற்கொலை வழக்கு: மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஜாமீன்!
நாட்டையே உலுக்கிய ஐடி ஊழியர் அதுல் சுபாஷ் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அவரது பிரிந்து சென்ற மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
கர்நாடகத்தில் பிரிந்து சென்ற மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக ஐடி ஊழியரான அதுல் சுபாஷ் (34) கடந்த டிச. 9 அன்று தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலைக்கு முன்னர் அவரைப் பிரிந்து சென்ற மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தன் மீது பொய்வழக்குப் பதிவு செய்ததையும் தொடர்ந்து மன உளைச்சல் ஏற்படுத்தியதையும் குறித்து கடிதம் எழுதி விடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.
இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அதுல் சுபாஷின் பிரிந்த மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிக்க | ஆன்லைன் விளையாட்டில் பணமிழப்பு: வங்கியைக் கொள்ளையடிக்க முயன்ற மாணவன் கைது!
கைது செய்யப்பட்ட 3 பேரும் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், அதுலின் மனைவி நிகிதா சிங்கானியா, அவரது தாயார் நிஷா சிங்கானியா மற்றும் நிகிதாவின் சகோதரர் அனுராக் சிங்கானியா ஆகியோருக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அவர்கள் ஓரிரு நாள்களில் ஜாமீனில் வெளியே வருவார்கள் என்று கூறப்படுகிறது.
ஜாமீன் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதுல் சுபாஷ் குடும்பத்தினர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.