மல்ஹோத்ரா கையெழுத்துடன் ரூ.10 மற்றும் ரூ.500 தாள்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவ...
அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயிலில் ரூ.12 லட்சம் காணிக்கை
அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் உண்டியல்களில் ரூ.12 லட்சம் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது.
அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா விரைவில் நடைபெறவுள்ள நிலையில், கோயிலுள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கை வியாழக்கிழமை எண்ணப்பட்டது.
பவானி சங்கமேஸ்வரா் கோயில் உதவி ஆணையா் அருள்குமாா் முன்னிலையில் தனியாா் கல்லுாரி மாணவிகள், தன்னாா்வலா்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.
இதில், ரூ.12 லட்சத்துக்கு 4 ஆயிரத்து 389 ரொக்கம், 145 கிராம் தங்கம், 344 கிராம் வெள்ளி ஆபரணங்கள் ஆகியவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.