செய்திகள் :

அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000; ``திமுக தோல்வி பயத்தின் வெளிப்பாடு'' - ராமதாஸ் விமர்சனம்!

post image

குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் ஜனவரி முதல் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசியதை விமர்சித்துள்ளார் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்.

அவரது ட்விட்டர் பதிவில், "பா.ம.க.வின் தொடர் வலியுறுத்தலுக்கு வெற்றி; அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை என்பது திமுகவின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு.

அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்

தமிழ்நாட்டில் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பங்களின் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வரும் ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இருந்தால் வரவேற்கத் தக்கது.

"2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், பின்னாளில் இத்திட்டத்தை செயல்படுத்திய திமுக அரசு, சாத்தியமற்ற தகுதிகளை நிர்ணயித்து, அதை பூர்த்தி செய்பவர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 2 கோடியே 20 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில் 1 கோடியே 20 லட்சத்திற்கும் குறைவான குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் தான் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

திமுக அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், எந்த நிபந்தனையும் இல்லாமல் குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பங்களின் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இத்தகைய சூழலில் தான் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு இன்னும் 15 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு எதிராக மக்களிடையே கடும் கொந்தளிப்பு நிலவுகிறது. அதனால், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்திற்கு ஆளாகியிருப்பதால் தான் இப்படியொரு அறிவிப்பை திமுக அரசு வெளியிட்டுள்ளது. அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை என்பது திமுகவின் தோல்வி பயத்தின் வெளிப்பாடுதான்.

ராமதாஸ்

ஆனாலும், திமுக அரசின் இத்தகைய நாடகங்களுக்கு மக்கள் ஏமாறமாட்டார்கள். 2021ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த திமுக, அதன் பின் இரண்டரை ஆண்டுகள் கழித்து 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தான் 1.16 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகையை வழங்கியது. அதன் பின்னர், தேர்தல் தோல்வி அச்சத்தின் காரணமாக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அனைவருக்கும் வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறது. திமுக அரசின் உண்மை நோக்கத்தை மக்கள் நன்கு அறிவார்கள். இதைக் கண்டு ஏமாற மாட்டார்கள். 2026ஆம் ஆண்டு தேர்தலில் திமுக வீழ்த்தப்படுவது உறுதி." என்று பதிவிட்டுள்ளார் ராமதாஸ்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

முதல்வர் ஸ்டாலினுக்கு warning கொடுத்த அரசு ஊழியர்கள்| காரணம் என்ன?

சமீபத்தில் அரசு ஊழியர்கள் சங்கம் ஒரு அறிக்கை வெளியீட்டுள்ளது. பெரும் விவாதத்தை ஏற்படுத்திருக்கும் அந்த அறிக்கையில் தற்போது முதல்வராக இருக்கும் மு.க ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது அரசு ஊழ... மேலும் பார்க்க

Nithyananda Secrets : இளமை மருந்து, சர்வதேச நெட்வொர்க் - நித்தியானந்தா மர்மங்கள் | JV Breaks

இன்றைய ஜூவி பிரேக்ஸில்,வெளிநாட்டுக்கு தப்பியோடி கைலாசா என புது நாட்டை உருவாக்கி வாழ்ந்து வருவதாக தெரிவித்திருக்கிறார் நித்தியானந்தா . அதே நேரத்தில் பெண்களை சோதனை எலிகளாக பயன்படுத்தவும் மறுபுறம் தமிழ்ந... மேலும் பார்க்க

Delhi : `1 ஓட்டு' வித்தியாசத்தில் மேயரான ஆம் ஆத்மி கவுன்சிலர் - பரபரப்பு தேர்தல்!

டெல்லி மாநகரக மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது. ஆம் ஆத்மி தலைவர் மகேஷ் கிஞ்சிக்கும் பாஜக வேட்பாளருக்கும் இடையே நெருக்கடியான போட்டி உருவானது. டெல்லியில் மொத்த கவுன்சிலர்கள் எண்ணிக்கை 265. மேயர் பதவியைத் ... மேலும் பார்க்க

US: உளவுத்துறை இயக்குனராக `இந்து பெண்' தேர்வு செய்த ட்ரம்ப்... `துளசி கபார்ட்' பின்புலம் என்ன?

ட்ரம்ப் அரசில் தேசிய புலனாய்வு இயக்குநராக செயல்படவிருக்கிறார் துளசி கபார்ட். இத்தகைய உயர் பதவிக்கு வரும் முதல் இந்து - அமெரிக்கர் துளசிதான்.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகையில் துளசியை 'F... மேலும் பார்க்க

இந்தியாவில் முதன்முறை: சிக்கும் ADMK முன்னாள் அமைச்சர்? | DMK | BJP | TVK VIJAY | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* Intro: Children's day & Jawaharlal Nehru Birthday * லாட்டரி மார்ட்டினுக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!* ஓ.பி.ஜி குழுமத்தில் அமலாக்கத்துறை சோதனை... 8... மேலும் பார்க்க

Hijab: ஹிஜாப் அணியாத பெண்களை சரிசெய்ய `மனநல சிகிச்சையகம்' அமைக்கும் ஈரான் அரசு!

ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம் என்ற அரசின் கட்டுப்பாட்டை பெண்கள் ஏற்க மறுக்கின்றனர். இதற்காக ஹிஜாப் அணியாத பெண்களின் மனநிலையை சரி செய்யப்போவதாக சிகிச்சை மையத்தைத் தொடங்குகிறது ஈரான் அரசு. இஸ்ல... மேலும் பார்க்க