செய்திகள் :

அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் அழைப்பு!

post image

தொகுதி சீரமைப்பு தொடர்பாக நடத்தப்படும் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு இப்பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் அனைத்துக் கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:

”தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தாக இருப்பதை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன்.

மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிய தென் மாநிலங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. ஆனால், அதுவே நாடாளுமன்றத்தில் நம் பலம் குறையக் காரணமாகி விடும்; நம் குரலை நசுக்கிவிடக் கூடும் என்றால் அது எவ்வகையில் நியாயமாகும்?

ஜனநாயக முறையில் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் எந்த நடவடிக்கையினையும் செய்யவே கூடாது என்பதல்ல எங்கள் வாதம். அதற்காக, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தில் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை!

கூட்டாட்சியியல் கோட்டுபாடுகளைப் பாதுகாக்கும் விதத்தில், நியாயமான, வெளிப்படைத்தன்மை மிக்க ஒரு வழிமுறையைப் பின்பற்றுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.

இதையும் படிக்க: மார்ச் 5-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின்

இச்சூழ்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இந்த மிக முக்கியப் பிரச்சினையைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கிறேன்.

இது தொடர்பாக, மார்ச் 5 அன்று, காலை 10 மணியளவில் தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10-வது தள கூட்ட அரங்கில், நாம் அனைவரும் கலந்தாலோசிக்கலாம் என நான் கருதுகிறேன். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நம் தாய்த் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க, கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் திரள்வோம்! சூழ்ந்துள்ள ஆபத்தை நம் ஒற்றுமையால் வெல்வோம்!" என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் குத்துச்சண்டை அகாதெமியைத் திறந்துவைத்தார் முதல்வர்!

சென்னை, கோபாலபுரத்தில் ரூ. 8 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 'கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாதெமி' கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(செவ்வாய்க்கிழமை) திறந்துவைத்தார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியி... மேலும் பார்க்க

பிப்.27 முதல் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் பிப்ரவரி 27 முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தெற்கு கேரளா மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல ... மேலும் பார்க்க

ஹிந்தி எது, ஆங்கிலம் எது விளக்க மறந்தது ஏன்? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

உங்கள் கட்சியினருக்கு, ஹிந்தி எது, ஆங்கிலம் எது என்பதை, உங்கள் அறிக்கை விளக்க மறந்து ஏன் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.இது பற்றி அண்ணாமலை தன்னுடைய எக்ஸ்... மேலும் பார்க்க

மொழிப் போரை எதிர்கொள்ளத் தயார்: முதல்வர் ஸ்டாலின்

ஹிந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் தமிழகத்துக்கான கல்வி நிதியை வ... மேலும் பார்க்க

மார்ச் 5-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக விவாதிக்க வரும் மார்ச் 5 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று(பிப். ... மேலும் பார்க்க

பாஜகவில் இருந்து ரஞ்சனா நாச்சியார் விலகல்! தனிக்கட்சி தொடங்குகிறார்!

மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவில் இருந்து ரஞ்சனா நாச்சியார் விலகியுள்ளார்.பாஜகவின் கலை, கலாசார பிரிவின் மாநிலச் செயலராக இருந்த ரஞ்சனா, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகள... மேலும் பார்க்க