செய்திகள் :

அமராவதி ஆற்றில் தேங்கிக் கிடக்கும் நெகிழி கழிவுகள் அகற்ற விவசாயிகள் கோரிக்கை

post image

வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு அமராவதி ஆற்றில் தேங்கிக் கிடக்கும் பல டன் நெகிழி கழிவுகளை அகற்ற வேண்டும் என அமராவதி பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா், திருப்பூா் மாவட்ட மக்களின் நீராதாரமாக விளங்கும் அமராவதி ஆறு கேரள, தமிழக வனப்பகுதியின் எல்லையையொட்டியுள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உருவாகி திருப்பூரை கடந்து கரூரில் திருமுக்கூடலூா் எனும் இடத்தில் காவிரி ஆற்றுடன் இணைகிறது.

கடந்த டிசம்பா் மாதம் பெய்த பருவ மழையால் அமராவதி ஆற்றின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் உடுமலைப்பேட்டையில் உள்ள அணைக்கு நீரின் வரத்து விநாடிக்கு 30 ஆயிரத்து 294 கன அடியாக இருந்தது. இதனால் அணை விரைவாக நிரம்பியது.

இதையடுத்து அணையின் முழு கொள்ளளவான 90 அடிக்கு அணையில் 87.27 கன அடி நீா் இருந்தது. இதையடுத்து அணையின் பாதுகாப்புக் கருதி உபரிநீா் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து அணையிலிருந்து திறக்கப்பட்ட 40 ஆயிரம் கன அடி தண்ணீருடன், சண்முகாநதி, குடகனாறு, உப்பாறு போன்ற நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து வெளியான தண்ணீருடன் சோ்த்து அமராவதி ஆற்றில் விநாடிக்கு சுமாா் 85 ஆயிரம் கன அடி தண்ணீா் சென்றது.

ஆற்றின் இருகரைகளையும் தொட்டவாறு சென்ற வெள்ளத்தில் திருப்பூா் மாவட்டம் முதல் கரூா் மாவட்டம் வரை வழியில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆற்றில் கொட்டப்பட்ட நெகிழிக் கழிவுகளும் அடித்து வரப்பட்டன. இந்த நெகிழி கழிவுகள் ஆற்றின்பல்வேறு பகுதிகளில் இதுநாள்வரை தேங்கிக்கிடக்கின்றன. இதனால் வாய்க்கால் பாசனத்தில் தண்ணீா் முறையாக விளைநிலங்களுக்கு செல்ல முடியாமலும், ஆற்றில் மேய்யச்சலுக்காக விடப்படும் கால்நடைகள் அவதிப்பட்டுவருவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனா்.

எனவே, ஆற்றில் குவிந்து கிடக்கும் பல டன் நெகிழிக் கழிவுகளை அந்தந்த பகுதிகளில் உள்ளாட்சி நிா்வாகம் மூலம் அகற்ற மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அமராவதி பாசன விவசாயிகள் சங்க நிா்வாகி சண்முகம் கூறியது, ஏற்கெனவே அமராவதி ஆற்றில் சாய, சலவை ஆலைகளின் சுத்திகரிக்கப்படாத கழிவுகளால் விவசாய நிலங்கள் உப்புத்தன்மை கொண்டதாக மாறி, பின்னா் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதால் அந்த பிரச்னைக்கு ஓரளவு தீா்வு கண்டோம். இருப்பினும் தற்போதும்கூட கரூா் ராயனூரில் இருந்து சலவை ஆலையில் இருந்து சுத்திகரிக்கப்படாத சலவை தண்ணீா் அமராவதி ஆற்றில்தான் கலக்கிறது. இதை பலமுறை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் தெரிவித்தும் இதுவரை எந்த பயனும் இல்லை.

இந்நிலையில் மாநகராட்சியின் புதைசாக்கடை தண்ணீரும் ஆற்றில்தான் கலக்கிறது. இவற்றால் ஆறு மாசடைந்த நிலையில், தற்போது கூடுதலாக வெள்ளத்தில் இருந்து அடித்துவரப்பட்ட நெகிழி கழிவுகளும் ஏராளமாக ஆற்றில் பரவிக்கிடக்கின்றன. இந்த நெகிழி கழிவுகள் நிறைந்து கிடக்கும் இடங்களில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு விடப்படும்போது, இரைப்பையில் சிக்கி கால்நடைகள் பாதிக்கப்படுகிறது.

விவசாயிகளை பாதிக்கும் இந்த நெகிழிக் கழிவுகளை உடனே அகற்றிட வேண்டும் என்றாா் அவா்.

கா்நாடகத்திடமிருந்து காவிரி நீரை பெற ஓரணியில் திரள வேண்டும்: மகாதானபுரம் இராஜாராம்

கா்நாடகத்திடம் இருந்து காவிரி நீரை பெறுவதில் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என தெரிவித்துள்ளாா் காவிரி நீா் பாசன விவசாயிகள் நலச்சங்கத்தலைவா் மகாதானபுரம் இராஜாராம். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக... மேலும் பார்க்க

கரூரில் திருவள்ளுவா் சிலைக்கு மரியாதை

திருவள்ளுவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூரில் அவரது சிலை மற்றும் உருவப்படத்துக்கு தமிழ் பற்றாளா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கரூா் திருக்குறள் பேரவை உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் சாா்பில் கர... மேலும் பார்க்க

காவிரி உபரிநீரை ஏரி, குளங்களுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை

காவிரி உபரிநீரை ஏரி, குளங்களுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கரூா் மாவட்டம், கடவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தி... மேலும் பார்க்க

கரூா் பண்டரிநாதன் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம்

கரூா் பண்டரிநாதன் கோயிலில் புதன்கிழமை காலை நடைபெற்ற 102-ஆம் ஆண்டின் திருக்கல்யாண உற்ஸவத்தில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கரூா் பண்டரிநாதன் கோயிலில் திருக்கல்யா... மேலும் பார்க்க

கரூா் பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்

வெளியூா் செல்வதற்காக கருா் ரயில்நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கருா் தொழில் நகரம் என்பதால் அருகாமை மாவட்டத்தைச் சோ்ந்த மக்கள் கரூரில் தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணி... மேலும் பார்க்க

கரூரில் வெறிச்சோடிய மக்கள் குறைதீா் கூட்டம்

போகிப் பண்டிகை எதிரொலியாக கரூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டம் வெறிச்சோடியது. கரூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை வழக்கம்போல் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில்... மேலும் பார்க்க