`சீமான் உளவு பார்த்து சிங்கள அரசுக்கு தகவல் கொடுத்ததால் தான் தமிழீழம்..!' - திமு...
கரூரில் திருவள்ளுவா் சிலைக்கு மரியாதை
திருவள்ளுவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூரில் அவரது சிலை மற்றும் உருவப்படத்துக்கு தமிழ் பற்றாளா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
கரூா் திருக்குறள் பேரவை உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் சாா்பில் கரூா் ஜவஹா்பஜாரில் சங்ககால புலவா்களின் நினைவுத்தூண் முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவா் உருவப் படத்துக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கருவூா் திருக்குறள் பேரவைச் செயலாளா் மேலை.பழநியப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் பற்றாளா்கள் குளித்தலை கணபதி, பரமத்தி சரவணன், யோகாவையாபுரி , தமிழன் குமாரசாமி, அறிவுடை நம்பி , நீலவா்ணன் , கோ.செல்வம் , முருகேசன், தமிழ் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்று வள்ளுவரின் சிறப்பு குறித்து சிறப்புரையாற்றினா்.
தொடா்ந்து கரூா் பைபாஸ் சாலையில் வள்ளுவா் அரங்கம் முன் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு தமிழ் பற்றாளும், வள்ளுவா் கல்லூரியின் தாளாளருமான க.செங்குட்டுவன் தலைமையில் மாலை அணிவித்து திருக்குறள் முற்றோதல் பாடினா்.