An open letter to CM MK Stalin | TVK Vijay Karur Stampede | Vikatan | DMK
``அமித் ஷாவிடம் மோடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்'' - மம்தா பானர்ஜி சொல்வதென்ன?
கடந்த செப்டம்பர் மாத இறுதியில் பெய்த கனமழையால் வடக்கு வங்காளம் பெரிதாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதைப் பார்வையிட்டுவிட்டு கொல்கத்தா திரும்பிய முதல்வர் மம்தா பானர்ஜி, செய்தியாளர் சந்திப்பில் 'அமித் ஷாவிடம் மோடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என்று பேசியிருக்கிறார்.
இதுகுறித்துப் பேசியிருக்கும் மம்தா பானர்ஜி, "பாஜக தலைவர் ஒருவர் (அமித் ஷா), மேற்கு வங்கம் வந்தார். அவர் வந்துபோன பிறகு மேற்கு வங்கம் இப்போது இயற்கை பேரழிவுகள், கனமழை போன்றவற்றால் தத்தளித்து வருகிறது. வாக்காளர் பட்டியலில் இருந்து பல லட்சம் பெயர்களை நீக்குவோம் என்றார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்திக் காட்டுவதாகக் கூறுகிறார்.

இந்திய தேர்தல் ஆணையம், பாஜகவின் உத்தரவின் அடிப்படையில் செயல்பட வேண்டுமா அல்லது பொதுமக்களின் உரிமைகளின் நலனுக்காக செயல்பட வேண்டுமா? இதையெல்லாம் செய்பவர் அமித் ஷா. மக்கள் விரோதப் போக்கைச் செய்துகொண்டிருக்கிறார். இந்த நாட்டின் செயல் பிரதமரைப் போல நடந்துகொள்கிறார்.
அமித் ஷாவை எப்போதும் நம்ப வேண்டாம் என பிரதமரை நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஒரு நாள் அவர், உங்களுக்கு எதிராக மாறுவார். அமித் ஷாவிடம் மோடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

என் வாழ்க்கையில் பல மத்திய அரசு ஆட்சியாளர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இதுபோன்ற ஒரு சர்வாதிகார ஆட்சியை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. பாஜக நாட்டை அழித்துவிடும் ஆபத்தான கட்சி" என்று காட்டமாகப் பேசியிருக்கிறார் மம்தா பானர்ஜி.