செய்திகள் :

முதல்கட்ட அமைதி ஒப்பந்தத்தை ஒப்புகொண்ட இஸ்ரேல், ஹமாஸ்; அடுத்து என்ன நடக்கும்? - ட்ரம்ப் அறிவிப்பு

post image

இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரிந்துரைத்த 20 அம்சங்களை கடந்த வாரம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முழுவதும் ஒப்புக்கொண்டார். ஹமாஸ் அந்த அம்சங்களில் உள்ள சிலவற்றை ஒப்புக்கொண்டது.

இதனையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை இரு தரப்புக்கும் இடையே எகிப்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அது வெற்றிகரமாக முடிந்துள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அடுத்து என்ன நடக்கும்?

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ட்ரம்ப், 'நமது அமைதி திட்டத்தின் முதல் கட்டத்தை இஸ்ரேல், ஹமாஸ் என இருதரப்பினரும் ஒப்புகொண்டு கையெழுத்திட்டுள்ளதை நான் பெருமையுடன் அறிவிக்கிறேன்.

இது அனைத்து பணயக் கைதிகளும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்பதையும், வலுவான மற்றும் நிலையான அமைதிக்கு முதல் அடியாக இஸ்ரேல் தனது படையைத் திரும்ப பெறும் என்பதையும் குறிக்கிறது.

அனைத்து தரப்பினரும் சமமாக நடத்தப்பட்டார்கள். இது அரபு நாடுகள், முஸ்லீம் நாடுகள், இஸ்ரேல், அதை சுற்றியுள்ள நாடுகள், அமெரிக்காவிற்கு சிறந்த தினம்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுக்கு மத்தியஸ்தம் செய்ய வந்த கத்தார், எகிப்து மற்றும் துருக்கியைச் சேர்ந்த நபர்களுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

கழுகார்: வெளிவந்த ஸ்வீட் பாக்ஸ் விவகாரம்; கலக்கத்தில் தந்தை - மகன் டு கொதிக்கும் உடன்பிறப்புகள்!

கொதிக்கும் உடன்பிறப்புகள்!கட்டையைப் போடும் மாவட்ட நிர்வாகி...சமீபத்தில், அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கடலோர மாவட்டம் ஒன்றுக்கு முதன்மையானவர் சென்றிருந்தபோது, அவரைச் சந்திக்க கட்சி நிர்வாகிகள் கூடிய... மேலும் பார்க்க

``மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது'' -நடிகர் சத்யராஜ்

கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டிலேயே நீளமான உயர் மட்ட பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.9) திறந்து வைத்திருக்கிறார். இந்நிலையில் 'மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்ப... மேலும் பார்க்க

"தெருப்பெயர்களில் சாதியை நீக்க அரசாணை; மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு என்ற சாதிப்பெயரா?" - சீமான்

கோவையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க 2020-ல் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகள் தற்போது முழுமையாக முடிக்கப்பட்டு தமிழ்நாட்டிலேயே மிக நீண்ட ம... மேலும் பார்க்க

சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை: விடுபட்ட அம்பேத்கர், எம்.சி.ராஜா பெயர்கள்; அண்ணாமலை கேள்வி

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில், ``இந்த மண்ணின் ஆதிக் குடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாக காலனி என்ற சொல் பதிவாகியிருக்கிறது.ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்... மேலும் பார்க்க

மதுரை: நெருங்கும் தேர்தல் - சௌராஷ்ட்ர சமூகத்தினர் நடத்தவிருக்கும் அரசியல் எழுச்சி மாநாடு

தமிழகத்தில் தேர்தல் காலம் நெருங்கி வருகிறது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று முடிவெடுக்கவும், தங்கள் சமூகத்தின் பலத்தை காட்டவும் சமீபகாலமாக பல்வேறு சமூக அமைப்புகள் ஆலோசனைக் கூட்டஙகள... மேலும் பார்க்க