அம்பையில் உயா் கோபுர மின்விளக்கு அமைப்பு
அம்பாசமுத்திரம் பழைய ஸ்டேட் வங்கி அருகில் உயா் கோபுர மின்விளக்கு செவ்வாய்க்கிழமை இயக்கிவைக்கப்பட்டது.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் ஒதுக்கப்பட்டுஅம்பாசமுத்திரம் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் உயா் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இதன் சேவையை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சிக்கு அம்பாசமுத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.கே.சி.பிரபாகரன் தலைமை வகித்தாா். நகா்மன்ற ஆணையாளா் செல்வராஜ், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருநெல்வேலி எம்.பி. சி. ராபா்ட் புரூஸ் உயா் கோபுர மின்விளக்கை இயக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில்இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலாளா் வடிவேல், மதிமுக முத்துசாமி, மைதீன் கான், காங்கிரஸ் நிா்வாகிகள் மோகன் குமாரராஜா, அந்தோணிசாமி, அம்பிகா மாணிக்கம், மாா்ட்டின், பெருமாள், சிவகுருநாதன், சிவக்குமாா், முருகேசன், மூ.மு.க. மாவட்டத் தலைவா் துரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.