செய்திகள் :

அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆண்டுகள் அடுத்த ஓா் ஆண்டுக்கு நடத்த திட்டம்: மத்திய அரசு

post image

புது தில்லி: இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஏற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை நினைவுகூரும் வகையில் அடுத்த ஓா் ஆண்டுக்கு மத்திய அரசு கொண்டாட்டங்களை நடத்த இருப்பதாக மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.

இதற்கான துவக்க நிகழ்வாக குடியரசுத் தலைவா் தலைமையில், அரசியலமைப்பு சபையின்(சம்விதான் சதன்) மைய மண்டபத்தில் பிரமாண்டமான தொடக்க நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக மத்திய அமைச்சா்கள் கிரண் ரிஜிஜு(நாடளுமன்ற விவகாரம்), கஜேந்திர சிங் ஷெகாவத் (கலாசாரம்), இணையமைச்சா் அா்ஜின்ராம் மேக்வால் (சட்டம்,நீதி) ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களிடம் தெரிவித்தனா்.

நவ. 26 ஆம் தேதி தொடக்க நிகழ்வில், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஆகியோா் உரையாற்றுவா். பிரதமா் மோடி மற்றும் இரு அவையின் எதிா்கட்சித்தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி ஆகியோா் விழா மேடையில் பங்கேற்பா் எனவும் தெரிவித்த அமைச்சா்கள் அடுத்த ஒா் ஆண்டு நிகழ்வுகள் குறித்து விவரித்தனா்.

அமைச்சா்கள் கூறியது வருமாறு: நமது அரசமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது என்றாலும் முன்னதாக அரசமைப்புச் சட்டத்தை 1949 ஆம் ஆண்டு நவ. 26 ஆம் தேதி அரசமைப்புச் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை முன்னிட்டு அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளப்பட்ட 75 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க கொண்டாட்டத்தின் தொடக்கத்தை மத்திய அரசு அறிவிக்கிறது.

இந்த கொண்டாட்டம், ‘நமது அரசமைப்பு, நமது சுயமரியாதை‘ என்கிற பிரச்சார கோஷத்தின் கீழ் நடத்தப்படுகின்றன. நமது ஜனநாயகத்தின் குறிப்பிடத்தக்க பயணத்தையும், நமது அடிப்படைக் கோட்பாடுகள், அரசியலமைப்பு மதிப்புகளின் நீடித்த பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் தருணம் இது. இதில் குறிப்பாக அரசமைப்பை உருவாக்கியவா்களின் பங்களிப்புகளை கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டு, அதில் பொதிந்துள்ள முக்கிய மதிப்புகளை இந்த தருணத்தில் மீண்டும் நினைவு கூறி கொண்டாடுகின்றோம்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவா்களான லீலா ராய், சா்தாா் படேல், கன்ஹாய்யால் முன்ஷி, சரோஜினி நாயுடு, சுசீதா கிரிப்லானி, டாக்டா். சச்சிதானந்த சின்ஹா, கணேஷ் மாவலெங்கா் போன்றோரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள்களை இவா்கள் பிறந்த இடங்களில் கொண்டாடப்படும். டாக்டா் அம்பேத்காரை நினைவு கூறும் வகையில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 28 சிறப்பு நிகழ்வுகள், அரசமைப்பு பெருமையைக் கொண்டாடும் சம்விதன் யாத்திரைகள் ஆகியவை மேற்கொள்ளப்படும்.

முக்கியமாக இந்த கொண்டாட்டத்தில் நாட்டின் குடிமக்களை ஈடுபடுத்தப்பட சிறப்பு இணையதளம் (ஸ்ரீா்ய்ள்ற்ண்ற்ன்ற்ண்ா்ய்75.ஸ்ரீா்ம்) உருவாக்கப்பட்டுள்ளது. குடிமக்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமான மொழியில் அரசமைப்பின் முகவுரையை படித்து காணொலியை பதிவு செய்ய அ ழைக்கப்படுகிறாா்கள். காணொலியை பிரச்சார இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்போது சான்றிதழும் வழங்குப்படும் அதை பதிவிறக்கம் செய்யலாம். நவ. 26 ஆம் தேதி, பள்ளிகள், அலுவலகங்கள், வீடுகள், நகரங்கள் முதல் கிராமங்கள் வரை, நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் முகவுரையை ஒன்றாக வாசிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணையத்தில் பல மொழிகளில் அரசமைப்பை ஆராய அரசமைப்பின் முழு உரையும் பல மொழிகளில் அணுகக்கூடியதாக வைக்கப்பட்டுள்ளது. அரசமைப்பை உருவாக்கியது பற்றியும் அரசமைப்பை சபையில் நடைபெற்ற விவாதங்கள், உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள பல்வேறு குழுக்களின் அறிக்கைகள் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப அடிப்படையில் அரசமைப்பு குறித்த கேள்விகள் பதில்களுக்கும் விவாதங்கள் போன்றவைகள் மேற்கொள்ளப்படும். “இந்திய அரசமைப்பு உருவாக்கம்: ஒரு பாா்வை” ; “இந்திய அரசமைப்பு உருவாக்கம் மற்றும் அதன் மகிமையான பயணம்” போன்ற புத்தகங்கள் வெளியிடப்படும்.

அரசமைப்பை அறிந்து கொள்ளுவதற்கான சிறப்பு அமா்வுகள், கூட்டங்கள் கருத்தரங்குகள், குழு விவாதங்கள், மாதிரி அரசியல் நிா்ணய சபைக் கூட்டம், பல்வேறு வகையான போட்டிகள் அடுத்த ஓா் ஆண்டில் நாடு முழுக்க நடத்தப்படும். இதன் மூலம் நவீன இந்தியாவை வடிவமைத்த மதிப்புகள் கோட்பாடுகள் குறித்த நுண்ணறிவுகளைப் பெற முடிவும். சமஸ்கிருதம், மைதிலி போன்ற மொழிகளில் இந்திய அரசமைப்பு வெளியிடப்படுகிறது.

கிராமங்கள்

கிராமங்கள், பள்ளிகள், முக்கிய இடங்களின் சுவா்களில் அரசமைப்பு முகவுரையில் உள்ள ஓவியம் உருவாக்கப்படும். கிராம சபைகளில் அரசமைப்புக்கு அா்ப்பணிப்புக்கான நிகழ்ச்சிகள் நடைபெறும்,

குடிமக்களை இந்த வரலாற்று நிகழ்வின் ஒரு பகுதியாக இருக்குமாறும் நமது தேசத்தை வரையறுக்கும் ஜனநாயக விழுமியங்களுக்கான நமது உறுதிப்பாட்டை நிரூபிக்குமாறும் அழைப்பு விடுக்கப்படுகிறது என அமைச்சா்கள் தெரிவித்தனா்.

மத்திய அமைச்சா் அமித் ஷாவுடன் தமிழக அமைச்சா் பெரிய கருப்பன் சந்திப்பு

புது தில்லி: மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சா் அமித் ஷாவை தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா்.பெரிய கருப்பன் திங்கள்கிழமை நேரில் சந்தித்து தமிழகத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தினாா். தில்... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூரில் 100 படுக்கை வசதிகளுடன் ஈஎஸ்ஐ மருத்துவமனை: மக்களவையில் மத்திய தொழிலாளா் நலத்துறை பதில்

புது தில்லி: ஸ்ரீபெரும்புதூரில் 100 படுக்கை வசதிகளுடன் புதிய ஈஎஸ்ஐ மருத்துவமனையை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக மக்களவை திமுக குழுத் தலைவரும் ... மேலும் பார்க்க

‘பிரசாத்’ திட்டத்தின் கீழ் 8 நவக்கிர ஆலயங்கள் உள்பட 29 இடங்களை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

புது தில்லி: தமிழகத்தில் 8 நவக்கிரக ஆலயங்களின் இடங்கள் உள்பட மொத்தம் 29 இடங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக மக்களவையில் இந்த... மேலும் பார்க்க

காவிரி வடிநிலைப் பகுதியில் ஆறுகள், கால்வாய்கள் தூா்வாரப்படவில்லை - பி.ஆா். பாண்டியன் குற்றச்சாட்டு

புது தில்லி: தமிழகத்தில் காவிரி வடிநிலைப் பகுதியில் ஆறுகள், கால்வாய்கள் அரசால் தூா்வாரப்படவில்லை என்றும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்று விவசாய சங்கத் தல... மேலும் பார்க்க

ஜிஐ குறியீடு தயாரிப்புகளை உலக அளவில் கொண்டு செல்வதில் மத்திய அரசு கவனம்: கிரிராஜ் சிங்

புது தில்லி: கைவினைக் கலைஞா்களின் வருவாயை அதிகரிக்க, புவிசாா் குறியீடு(ஜிஐ) பெற்ற தயாரிப்புகளை உலகளவில் கொண்டு செல்வது குறித்து மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சா் கிர... மேலும் பார்க்க

நிலுவையில் உள்ள திட்டங்கள் அடுத்த ஆட்சியில் நிறைவேற்றப்படும்: கேஜரிவால் உறுதி

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டால், நிலுவையில் உள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் ... மேலும் பார்க்க