செய்திகள் :

அரசியலமைப்புதான் உயர்ந்தது: குடியரசுத் துணைத் தலைவருக்கு திமுக கண்டனம்!

post image

குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கருக்கு திமுக தரப்பில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி ஒப்புதல் வழங்காமல் தாமதப்படுத்தியதாக சா்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசு தொடா்ந்த வழக்கில் அண்மையில் தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவா் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு நிா்ணயித்தது.

இந்தச் சூழலில், தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநிலங்களவை பயிற்சித் திட்ட நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பங்கேற்றாா்.

அப்போது, ‘குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது’ எனக் குறிப்பிட்ட அவா், ‘நாடாளுமன்றத்தைவிட மேலானதாக நீதிமன்றம் செயல்படுவதாக’ சாடினாா்.

ஜகதீப் தன்கரின் பேச்சு விமர்சனத்துக்குள்ளான நிலையில், அவருக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜகதீப் தன்கருக்கு கண்டனம் தெரிவித்து திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா வெள்ளிக்கிழமை காலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ”அரசியலமைப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட அதிகாரங்களின் படி நிர்வாகம், சட்டமன்றம்/ நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவை தனித்தனி அதிகாரங்களைக் கொண்டுள்ளன. இதன் அடிப்படையில் இம்மூன்று துறைகளும் அவரவர் துறைகளில் இயங்கினாலும் அரசியலமைப்பு தான் அனைத்தையும் விட உயர்ந்தது என்பதை ஒருவர் மறந்துவிடக் கூடாது. 

ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவர்களின் பங்கு என்ன என்பது குறித்து உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு சட்ட பிரிவு 142 ஐ பயன்படுத்தி சமீபத்தில் தெளிவுபடுத்தி உள்ளது. அதில் அரசியலமைப்பு அதிகாரம் என்ற பெயரில் எந்தவொரு தனிநபரும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவியுள்ளது.

இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்த துணைக்குடியரசுத் தலைவர் ஜகதீப் தங்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை. இந்தியாவில் "சட்டத்தின் ஆட்சி" தான் நடக்கிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

பரபரப்பான சூழலில் கூடிய மதிமுக நிர்வாகக் குழு!

பரபரப்பான சூழலில் மதிமுக நிர்வாகக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.சென்னையில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நிர்வாகக் கூட்டம் நடைபெற்று வருகிறது.மதிமுக அவ... மேலும் பார்க்க

ஈஸ்டர் திருநாள்: கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை!

ஈஸ்டர் திருநாள் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நாளை உலகம் ம... மேலும் பார்க்க

மக்களின் மனுக்களுக்கு மதிப்பளிக்காத அரசு: திமுக அரசுக்கு அதிமுக கண்டனம்

திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால், 3 பேர் பலியான சம்பவத்தைக் குறிப்பிட்டு, திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் தனது எக்ஸ... மேலும் பார்க்க

ஈஸ்டர் திருநாள்: விஜய் வாழ்த்து!

ஈஸ்டர் திருநாளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “அன்பு, கருணை, மனிதநேயம், சகோதரத்துவம், தியாகம் ஆகியவற்றை மனித குலத்துக்குப் போதி... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2832 கன அடியாக அதிகரித்துள்ளது.காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று(ஏப். 20) காலை மேட்டூர் அணை... மேலும் பார்க்க

தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிய சிறுவன் மீட்பு!

சென்னை அரும்பாக்கத்தில், தெருவில் தேங்கிய மழைநீரில் கசிந்த மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிய சிறுவனை, இளைஞா் ஒருவா் துணிச்சலாக செயல்பட்டு காப்பாற்றினாா். அவரை பலரும் பாராட்டி வருகின்றனா். அரும்பா... மேலும் பார்க்க