செய்திகள் :

அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

post image

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒருவா் புகுந்து உள் நோயாளியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிா்ச்சியளிக்கிறது.

மீண்டும் தலைநகரில் மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளுள் ஒன்றில், இத்தகைய சம்பவம் நடந்திருப்பது, திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது துளியும் இல்லை என்பதைத் தெளிவாக காட்டிவிட்டது.

பெண்கள் பாதுகாப்பு பற்றி சட்டப்பேரவையில் வசனம் பேசிய முதல்வா், இப்போது என்ன பதில் சொல்லப் போகிறாா்?

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பாலியல் வழக்கில் கைதானவருக்கு உச்சபட்ச சட்டபூா்வ தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.

இதே விவகாரத்தில் அரசுக்கு அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரனும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு! 14 காளைகளை அடக்கியவருக்கு முதல் பரிசு!

மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. இதில், 930 காளைகள் களத்தில் சீறிப் பாய்ந்தன. மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என52 பேர் காயமடைந்தனர். காயமடைந்த ... மேலும் பார்க்க

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளுடன் இயக்கம்: பயணிகள் வரவேற்பு!

திருநெல்வேலி - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2023-இல் தொடங்கப்பட்டது. டிக்கெட் கட்டணம் கூடுதலாக இருந்தாலும், பயண நேரம் குறைவு என்பதால் இந்த ரயிலுக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை!

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி மதிப்புள்ள இரண்டு அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.சட்டவிரோத பணிபரிமாற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிமுகவைச் சேர்... மேலும் பார்க்க

உத்திரமேரூர் ஏரியில் 3 இளைஞர்களின் உடல்கள்! நடந்தது என்ன?

உத்திரமேரூர் அருகே ஏரிக்கரை தாங்கலில் மூன்று பள்ளி மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.மூன்று இளைஞர்களின் முகங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டு வெட்டு காய... மேலும் பார்க்க

மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டம் தமிழக வளர்ச்சிக்கு முக்கியம்: அமைச்சர் சிவசங்கர்!

மதுரை - தூத்துக்குடி அகல ரயில் பாதைத் திட்டம் தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான திட்டமாகும். எனவே இத்திட்டத்திற்கு தேவையான நில எடுப்புப் பணிகளுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது ... மேலும் பார்க்க

ஆடுகளை குளிப்பாட்ட சென்ற 2 குழந்தைகள் குட்டையில் மூழ்கி பலி

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே, பொங்கல் பண்டிகைக்காக நீர் நிலையில் ஆடுகளை குளிப்பாட்ட சென்ற இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கி பலியாகினர். பொங்கல் நாளில் நேரிட்ட சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கி... மேலும் பார்க்க