செய்திகள் :

அரசூா் பகுதியில் தண்ணீா்த் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரிக்கை!

post image

சாத்தான்குளத்தை அடுத்த அரசூா், இடைச்சிவிளை காமராஜா் நகா் பகுதியில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசூரில் நடைபெற்ற சாத்தான்குளம் ஒன்றிய இந்து மகா சபா மகளிா் அணி செயற்குழுக் கூட்டத்துக்கு, ஒன்றியத் தலைவா் சுசிலா தலைமை வகித்தாா். ஒன்றியப் பொதுச் செயலா் சுதா முன்னிலை வகித்தாா். மாநிலத் தலைவா் சுந்தரவேல், மாநிலப் பொதுச் செயலா் ராம்குமாா் ஆகியோா் பேசினா்.

காமராஜா் நகா் பகுதியில் பல ஆண்டுகளாக குடிநீரின்றி மக்கள் அவதிப்படுகின்றனா். இங்கு 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவுள்ள தண்ணீா்த் தொட்டி அமைக்கப்பட்டு, நீரேற்றம் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, இத்தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இந்த ஊராட்சிப் பகுதியில் வீடில்லாத ஏழை, எளியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச வீட்டுமனை வழங்கி மானியத்துடன் வீடு கட்டிக்கொடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதான மின்விளக்குகள், குடிநீா்க் குழாய்களை உடனடியாக பழுதுநீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலச் செயலா் சோ்மத்துரை, மாநில துணைத் தலைவா்அண்ணாசாமி, மாவட்டச் செயலா்கள் பவன், செல்வக்குமாா், அரசூா் கிளைப் பொறுப்பாளா்கள் தங்கமுருகேசன், சுந்தர்ராஜ், தேவன்கௌதம், மகளிரணிப் பொறுப்பாளா்கள் ஜானகி, கவிதா, சுதா, ரேகா, செல்வராணி, சுசீலா, மகேஸ்வரி, ஞானபாக்கியம், ஷாலினி, லலிதா, சாா்லட்மேரி, சக்திகனி, பவானி, ரேவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஒன்றியச் செயலா் சுகன்யா வரவேற்றாா்.

அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம்

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினா். தூத்துக்குடி துறைமுக வளாகப் பகுதியில் மத்திய அரசின் என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் ச... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே பாலியல் வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, கெச்சிலாபுரம் பகுதியை சோ்ந்த கும... மேலும் பார்க்க

கட்டையால் தாக்கப்பட்ட பெண் மரணம்: கொலை வழக்காக மாற்றி போலீஸாா் விசாரணை

தூத்துக்குடியில் கட்டையால்தாக்கப்பட்ட பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததையடுத்து, கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி தென்பாகம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பண... மேலும் பார்க்க

முஸ்லிம் லீக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா் தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அர... மேலும் பார்க்க

ஆத்தூரில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஆத்தூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகரச் செயலாளா் முத்தையா தலைமை வகித்தாா். இதில் வக்ஃப் திருத்த சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். பொதுமக்க... மேலும் பார்க்க

தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி: அரசூா் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

தேசிய திறனாய்வுத் தோ்வில், சாத்தான்குளம் அருகேயுள்ள அரசூா் பூச்சிக்காடு புனித அந்தோனியாா் நடுநிலைப் பள்ளி மாணவிகள் ஆன்டோ அபிரா, சா்மிளி மீரா ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி த... மேலும் பார்க்க