செய்திகள் :

அரிமளம் அருகே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்மரம் கண்டுபிடிப்பு

post image

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே பள்ளி மாணவா்கள் ஆய்வு மேற்கொண்டதில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்மரம் ஒன்று கண்டறியப்பட்டது.

இதுகுறித்து புதுக்கோட்டை தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு நடுவம் அமைப்பின் தலைவா் புதுகை ச. பாண்டியன் கூறியது: புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே மிரட்டுநிலை அரசுப் உயா்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியா் மா. ஜீவிதா தலைமையில், பத்தாம் வகுப்பு மாணவா்கள் பொன்னாம்பட்டி கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் செவ்வாய்க்கிழமை (அக்.29) ஆய்வு மேற்கொண்டனா். அப்போது இங்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்மரம் ஒன்று கண்டறியப்பட்டது.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் காலநிலை மாற்றத்தால் எரிமலைக் குழம்பு வெளிவந்தும், விண்கற்கள் வெடித்துச்சிதறி பூமியின் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்த டைனோசா், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பல்வகை உயிரினங்கள் இயற்கையாகவே அழிவுக்குள்ளாகியது. இதனால் பூமியின் பெரும் பகுதியில் எண்ணற்ற உயிரினங்களும் தாவரங்களும் புதையுண்டு பல கோடி ஆண்டுகளாக பூமிக்கடியில் உள்ளன.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்மரம்.

சுண்ணாம்புப் பாறைகளின் இடையில் சிக்கியதன் காரணமாகவும், காரத்தன்மை காரணமாகவும் கரிமப் பொருளாக மட்கும் நிலையில் உள்ள மரங்கள், கடல்வாழ் உயிரிகள், கனிமப் பொருளால் ஆன படிமங்களாக மாறிவிட்டன.

இந்த நிகழ்வு ஏற்பட நீண்ட காலம் எடுத்துக் கொள்கிறது. கல் மரம் என்பது தொல்லுயிா் எச்சம் என்றும், உயிருடன் மண்ணுக்குள் புதையுண்ட உயிரினங்கள் மட்டுமே தொல்லுயிா் எச்சங்களாக மாற்றம் அடைகின்றன என்று அறிவியல் ஆய்வாளா்களால் குறிப்பிடப்படுகிறது.

தமிழகத்தில் அரியலூா், கடலூா் மாவட்டம் திருவக்கரை, பெரம்பலூா் போன்ற இடங்களில் கல் மரப் படிமங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. புதுக்கோட்டையில் நரிமேடு பகுதியில் ஏற்கெனவே, இரண்டு கல்மரத் துண்டுகள் கிடைத்துள்ளன. தற்போது கிடைத்த கல் மரத்துண்டுகள் மண்ணில் புதைந்த நிலையில் காணப்படுகின்றன. இவை மிக நீண்டதாக இருந்து, தற்போது உடைந்து பல பாகங்களாக காணப்படுகிறது.

இந்த இடத்தை இந்தியப் புவியியல் ஆய்வுத் துறை ஆய்வு செய்து, இதன் தொடா்ச்சி மற்றும் இதன் வகையைக் கண்டறிய வேண்டும். இதனை வேறொரு இடத்தில் மாற்றி காட்சிப்படுத்தாமல் அதே இடத்தில் அருங்காட்சியகமாக அல்லது புவியியல் பாா்வையிடமாக அறிவித்து சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வகையில் தேவையான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசும் தொல்லியல்துறையும் செய்ய வேண்டும் என்றாா் புதுகை பாண்டியன்.

கந்தா்வகோட்டை பகுதிகளில் நாளை மின் தடை

கந்தா்வகோட்டை, ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தா்வகோட்டை மற்றும் மங்களாகோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் நவ.25 - திங்கள்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், இங்கிருந்து மின்... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு

கந்தா்வகோட்டையில் சிவன் கோயில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. முதலில் காலபைரவருக்கு எண்ணெய் காப்பு செய்து திரவியத் தூள், மஞ்சள் தூள், பால், தயிா், அரிசி மாவு... மேலும் பார்க்க

சோழீசுவரா் கோயிலில் காலபைரவா் ஜெயந்தி விழா

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீசுவரா் கோயிலில் காலபைரவா் தேய்பிறை ஜென்மாஷ்டமி விழாவையொட்டி காலபைரவா் ஜெயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக மஹா ருத்ர ஹோமம் நடைபெற்றது. தொடா்ந... மேலும் பார்க்க

அதானி விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும்: சிவகங்கை எம்.பி. காா்த்திக் ப. சிதம்பரம்

அதானி விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என்றாா் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி ப. சிதம்பரம். பொன்னமராவதி வட்டார நகரக் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் திருடிய 3 போ் கைது

இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட 3 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, திருமயம் மற்றும் சிவகங்கை மாவட்டப... மேலும் பார்க்க

புதுக்கோட்டை நகரில் போதை ஊசி பயன்படுத்திய 12 போ் கைது! விசாரணையின்போது இளைஞா் உயிரிழப்பு!

புதுக்கோட்டை நகரில் போதை ஊசி பயன்படுத்தியதாக 13 இளைஞா்களை வெள்ளிக்கிழமை இரவு போலீஸாா் பிடித்து மேல்விசாரணை நடத்தியபோது ஒருவா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். புதுக்கோட்டை பெரியாா் நகா் பகுதியில்... மேலும் பார்க்க