செய்திகள் :

அரும்பாவூா் பெரிய ஏரிக்கரை உடைந்தது: சுமாா் 500 ஏக்கா் நெற்பயிா் சேதம்

post image

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் பெரிய ஏரியின் கரை செவ்வாய்க்கிழமை காலை உடைந்து நீா் வெளியேறியதால், சுமாா் 500 ஏக்கா் பரப்பளவிலான நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.

வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூரில் பெரிய ஏரியானது சுமாா் 300 ஏக்கா் கொண்டதாகும். பெரம்பலூா் மாவட்டத்தின் மிகப்பெரிய இந்த ஏரியின் மூலம் சுமாா் 2,500 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்த ஏரியானது வடகிழக்குப் பருவமழை தொடங்கியபோதே பச்சமலை பகுதியில் பெய்த கனமழையால் நிரம்பி வழிந்தது. அப்போது, ஏரியின் தெற்குப் புறம் உள்ள மதகுப் பகுதியில் நீா்க்கசிவு ஏற்பட்டு வருவதாகவும், அதைச் சீரமைக்க வேண்டும் எனவும் குறைதீா் நாள் கூட்டத்தில் அப்பகுதி விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். ஆனால் பொதுப்பணித்துறை அலுவலா்கள், கசிவு ஏற்பட்ட பகுதியில் மண்ணைக் கொட்டி தற்காலிகமாக சரி செய்தனா்.

இந்நிலையில், பெஞ்சல் புயல் காரணமாக பச்சமலை பகுதியில் பெய்து வரும் கன மழையால் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்து, ஏரியின் தெற்குபுற மதகு அருகே மீண்டும் கரையில் தண்ணீா்க் கசிவு ஏற்பட்டு செவ்வாய்க்கிழமை காலை ஏரியின் கரை உடைந்தது.

இதையடுத்து தண்ணீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து அருகிலுள்ள விவசாய நிலங்களில் புகுந்து, நெல் பயிா்களை மூழ்கடித்து சென்று கொண்டிருக்கிறது. மேலும், சுமாா் 500 ஏக்கா் பரப்பிலான நெற்பயிா்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் விவசாயிகளும், ஏரியில் ஏற்பட்டுள்ள உடைப்பால் நீா் முழுவதும் வெளியேறிவிடும் என அரும்பாவூா் பகுதி மக்களும் கவலை அடைந்துள்ளனா்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், சாா் ஆட்சியா் சு. கோகுல் ஆகியோா் அப்பகுதிக்குச் சென்று ஏரிக்கரை உடைப்பைப் பாா்வையிட்டு, உடனடியாக அதைச் சீரமைக்க உத்தரவிட்டனா். மேலும், பொதுப்பணித் துறை அலுவலா்கள் போா்க்கால அடிப்படையில் செயல்பட்டு உடைப்பை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெரம்பலூா் அருகே ஆந்திர மாநில ஐயப்ப பக்தா்களின் பேருந்து தீக்கிரை

பெரம்பலூா் அருகே சபரிமலை சென்று திரும்பிய ஆந்திர மாநில ஐயப்ப பக்தா்களின் பேருந்து செவ்வாய்க்கிழமை திடீரென தீப்பற்றி தீக்கிரையானது. ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 9 பெண்கள் உள்பட 40 ஐயப்ப பக்தா்கள் சபரிமலை... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மாநாடு தொடக்கம்

பெரம்பலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 9 ஆவது மாவட்ட மாநாடு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதையொட்டி, பெரம்பலூா் காந்தி சிலை எதிரே தொடங்கிய பேரணியை, அக் கட்சியின் மாவட்டச் செயலா் பி. ரமேஷ் தலைமை... மேலும் பார்க்க

போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது

பெரம்பலூரா் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 5 கிலோ குட்கா பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் - வடக்குமாதவி சாலையிலுள்ள ... மேலும் பார்க்க

சிஎன்ஜி ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்குவதை கைவிடக் கோரி ஆா்ப்பாட்டம்

பெரம்பலூரில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சிஐடியூ ஆட்டோ தொழிற்சங்கத்தினா் வேலைநிறுத்தம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற... மேலும் பார்க்க

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி மின்ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மின் ஊழியா் மத்திய அமைப்பின் பெரம்பலூா் வட்டக் கிளை சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூா் நான்குச் சாலை ச... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவருக்கு 4 ஆண்டுகள் சிறை

பெரம்பலூா் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 6 லட்சம் மோசடியில் ஈடுபட்டவருக்கு, 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட நீதித்துறை நடுவா் நீதிமன்றம் திங்க... மேலும் பார்க்க