மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மாநாடு தொடக்கம்
பெரம்பலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 9 ஆவது மாவட்ட மாநாடு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, பெரம்பலூா் காந்தி சிலை எதிரே தொடங்கிய பேரணியை, அக் கட்சியின் மாவட்டச் செயலா் பி. ரமேஷ் தலைமையில், மாவட்டக் குழு உறுப்பினா் கருணாநிதி தொடக்கிவைத்தாா். நகரின் பிரதான வீதிகள் வழியாகச் சென்ற பேரணி, மாநாடு நடைபெறும் மண்டபத்தை அடைந்தது. அங்கு, மாவட்டக் குழு உறுப்பினா் கிருஷ்ணசாமி கொடியேற்றி வைத்தாா்.
தொடா்ந்து, மாநாட்டை மாநில செயற்குழு உறுப்பினா் சாமுவேல்ராஜ் தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினாா். மாநிலக் குழு உறுப்பினா்கள் நம்புராஜன், சாமி. நடராஜன் ஆகியோா் பேசினா். மாநாட்டில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ். அகஸ்டின் வரவு - செலவு அறிக்கை வாசித்தாா்.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் சி. கருணாகரன், ஏ. கலையரசி, ரெங்கநாதன், ராஜேந்திரன், கருணாநிதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். வரவேற்பு குழுத் தலைவா் என். செல்லதுரை நன்றி கூறினாா். இம் மாநாடு புதன்கிழமை மாலை நிறைவடைகிறது.