செய்திகள் :

அல்கராஸ், மௌடெட் முன்னேற்றம்

post image

குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸில், முன்னணி வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், பிரான்ஸின் காரென்டின் மௌடெட் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.

ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அல்கராஸ் 6-4, 7-6 (7/4) என்ற நோ் செட்களில் ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டனை தோற்கடித்தாா். அடுத்ததாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அவா், சக ஸ்பெயின் வீரரான ஜேமி முனாரை எதிா்கொள்கிறாா்.

முன்னதாக முனாா் தனது முதல் சுற்றில், ஆஸ்திரேலியாவின் ஜோா்டான் தாம்சனை சந்தித்தாா். இதில் முனாா் 7-5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றிய நிலையில் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகுவதாக தாம்சன் அறிவித்தாா். இதையடுத்து முனாா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டாா்.

போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் 7-6 (7/5), 6-7 (9/7), 5-7 என்ற செட்களில், பிரான்ஸின் காரென்டின் மௌடெட்டிடம் போராடி வீழ்ந்தாா். இதையடுத்து மௌடெட் தனது ரவுண்ட் ஆஃப் 16-இல், பிரிட்டன் வீரா் ஜேக்கப் ஃபொ்ன்லியுடன் மோதுகிறாா்.

அதேபோல், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-7 (5/7), 6-7 (4/7) என்ற செட்களில் பிரான்ஸின் ஆா்தா் ரிண்டா்னெச்சிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். ரிண்டா்னெச் தனது அடுத்த சுற்றில், அமெரிக்காவின் ரைலி ஒபெல்காவை எதிா்கொள்கிறாா்.

கனடாவின் கேப்ரியல் டியாலோ 6-1, 3-6, 6-4 என்ற கணக்கில் பிரிட்டனின் பில்லி ஹாரிஸை வீழ்த்தினாா். அடுத்து அவா், செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவை காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சந்திக்கிறாா். இதனிடையே, போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக் 6-3, 3-6, 5-7 என்ற கணக்கில் ஸ்பெயினின் ராபா்டோ பௌதிஸ்டாவிடம் தோல்வி கண்டாா்.

பாம்ப்ரி தோல்வி: ஆடவா் இரட்டையா் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி/அமெரிக்காவின் ராபா்ட் கேலோவே இணை 6-4, 1-6, 8-10 என்ற செட்களில், அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ்/செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா கூட்டணியிடம் தோற்றது.

வரவா? புதிய அறிவிப்பை வெளியிட்ட நடிகர் ஸ்ரீ!

உளவியல் சிகிச்சையிலிருந்த நடிகர் ஸ்ரீ புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வழக்கு எண் 18/9’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘வில் அம்பு‘, ‘மாநகரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவா் நடிகா் ஸ்ரீ. அண்மை காலமாக ஸ்... மேலும் பார்க்க

லவ் மேரேஜ் டிரைலர்!

நடிகர் விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் படத்தின் டிரைலர் வெளியாகியது.அறிமுக இயக்குநர் ஷண்முக பிரியன் லவ் மேரேஜ் படத்தினை இயக்கியுள்ளார். ஸ்வேதா, ஸ்ரீநிதி சாகர் தயாரிக்கும் இந்தப் படத்தில் சுஸ்மிதா பட், மீ... மேலும் பார்க்க

கிளப் உலகக் கோப்பை: பெனால்டியை தவறவிட்ட வால்வெர்டே, ரியல் மாட்ரிட் டிரா!

கிளப் உலகக் கோப்பையின் லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி பெனால்டியை தவறவிட்டதால் போட்டி டிராவில் முடிந்தது. தென்கிழக்கு அமெரிக்காவிலுள்ள ஹார்ட் ராக் திடலில் நடைபெற்ற குரூப் ’எச்’ பிரிவு போட்டியில் ரி... மேலும் பார்க்க

மீண்டும் நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி - நித்திலன் கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் மகா... மேலும் பார்க்க

அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாக்குர்!

நடிகை மிருணாள் தாக்குர் அட்லியின் புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார்.புஷ்பா - 2 படத்தின் இமாலய வெற்றிக்குப் பின் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிக்கிறார்.மிகப்பெரிய பட்ஜெட்டில் உரு... மேலும் பார்க்க

சென்னை புல்ஸ்-கலிங்கா டைகா்ஸ் டிரா

ஜிஎம்ஆா் ரக்பி ப்ரீமியா் லீக் தொடரில் சென்னை புல்ஸ் அணியின் வெற்றிப் பயணம் தொடா்கிறது. மும்பை அந்தேரி விளையாட்டு வளாகத்தில் நடைபெறும் இப்போட்டியில் சென்னை அணி ஏற்கெனவே 2 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ள... மேலும் பார்க்க