எறும்பு திண்ணி கடத்தல்; திரைப்பட பாணியில் களமிறங்கிய காவல்துறை... கூண்டோடு கைது ...
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முதல் சுற்று முடிவில் 6 பேர் காயம்!
மதுரை மாவட்டத்தின் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியின் முதல் சுற்றில் உரிமையாளர் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் அன்று அவனியாபுரத்திலும் அதனை தொடர்ந்து அலங்காநல்லூர் மற்றம் பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.
மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின்னர் விதிகளுக்கு உட்பட்ட 1100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
போட்டிகளை மதுரை ஆட்சியர் சங்கீதா முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வாடிவாசலில் இருந்து வெளியேறிய காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். 2000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
100 காளைகள் என ஒவ்வொரு மணி நேரத்திற்கும் காளைகள் களத்தில் களமாடுகின்றன. இதுவரை மாடுபிடி வீரர்கள் 4 பேர் மாட்டின் உரிமையாளர், பார்வையாளர்கள் 6 பேர் காயடைந்தனர்.