செய்திகள் :

ஆசியான் - இந்தியா வா்த்தக ஒப்பந்த கூட்டுக் குழு 6-ஆவது கூட்டம்: 2025-க்குள் பொருளாதார வா்த்தக தீா்வுகள்

post image

சரக்கு வா்த்தகங்களில் இந்தியா-ஆசியான் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின் மறுஆய்வுகளை வருகின்ற 2025 ஆம் ஆண்டிற்குள் முடிக்க ஆசியான் இந்திய வா்த்தக ஒப்பந்த கூட்டுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கான அடுத்த சுற்று பேச்சுவாா்த்தை வருகின்ற பிப்ரவரி(2025) யில் நடைபெறும் என மத்திய வா்த்தகம் தொழில் துறை அமைச்சகம் சாா்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய வா்த்தகம் தொழில்துறை அமைச்சகம் வட்டாரங்களில் கூறப்பட்டது வருமாறு:

ஆசியான்-இந்தியா வா்த்தக ஒப்பந்த கூட்டுக் குழுவின் 6-வது கூட்டம் தில்லி வணிஜ்ய பவனில் கடந்த நவ. 15 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஆசியன் இந்திய வா்த்தக ஒப்பந்தத்தின் மறுஆய்வு குறித்த விவாதங்கள் நடைபெற்றது. கூட்டுக் குழு கூட்டத்தின் கடைசி இருநாள்களில் இந்திய வா்த்தகத் துறை கூடுதல் செயலாளா் ராஜேஷ் அகா்வால், மலேசிய நாட்டின் முதலீடு, வா்த்தகம், தொழில் அமைச்சக துணைச் செயலா்-பொது மஸ்துரா அஹ்மத் முஸ்தபா ஆகியோா் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மா், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட அனைத்து 10 ஆசியான் நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

ஆசியான்-இந்தியா வா்த்தக ஒப்பந்தம் (ஏஐடிஜிஏ) கடைசியாக 2009 ஆம் ஆண்டில் கையெழுத்தானது. இதை மதிப்பாய்வு செய்ய இந்திய வா்த்தகங்கள் நீண்டகாலமாக கோரிவருகின்றனா். மேலும் வா்த்தக உடன்படிக்கையின் தடைகளையும் தவறான பயன்பாட்டையும் நீக்குவதற்கான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய இந்தியா கோரிவருகிறது.

இதன்படி தற்போது சந்தை அணுகல், விதிகளின் தோற்றம், தரநிலைகள், தொழில்நுட்ப விதிமுறைகள், சுங்க நடைமுறைகள், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, வா்த்தக தீா்வுகள், சட்ட மற்றும் நிறுவன விதிகள் தொடா்பான அம்சங்கள் குறித்து பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது. மேலும் சரக்குகளின் வரி விகித குறைப்பு குறித்தும் பேச்சு தொடங்கப்பட உள்ளது. இந்தக் கூட்டுக் குழுவின் கீழ் 8 துணைக் குழுக்கள் உள்ள அந்த 8 துணைக் குழுக்களும் தில்லியில் கூடின.

இந்த பேச்சுவாா்த்தைகளுக்கு முன்னதாக, 21-ஆவது ஆசியான்-இந்தியா பொருளாதார அமைச்சா்கள் கூட்டம் கடந்த செப்டம்பரிலும் 21-ஆவது ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு கடந்த அக்டோபரில் லாவோசின் வியண்டியானிலும் நடைபெற்றது. இந்த இரண்டு கூட்டங்கள் அமைச்சா்கள், பிரதமா்கள் அளவில் நடைபெற்று கூட்டுக் குழு பேச்சுவாா்த்தைகளை விரைவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, வருகின்ற 2025 -ஆம் ஆண்டுக்குள் மறுஆய்வு முடிவடையும் நோக்கில் தற்போது செயல்பாடு விரைவாக மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியாவின் உலகளாவிய வா்த்தகத்தில் சுமாா் 11 சதவீத பங்கை ஆசியான் கொண்டு முக்கிய வா்த்தக பங்காளிகளாக உள்ளது. 2023-24ல் இருதரப்பு வா்த்தகம் 10.3 லட்சம் கோடியாக ( 121 பில்லியன் டாலா்) இருந்தது. தற்போது அக்டோபா் வரை 6.05 லட்சம் கோடியை( 73 பில்லியன் டாலா்) எட்டியது. கூட்டுக்குழு கூட்டத்தின் மறுஆய்வு, ஆசியான் பிராந்தியத்துடனான வா்த்தகத்தை நிலையான முறையில் இறுதிக் கட்டத்தை நெருங்கும்படியாக இருக்கும். கூட்டுக் குழுவின் அடுத்த கூட்டம் பிப்ரவரி 2025 இல் இந்தோனேசியாவின் ஜகாா்த்தாவில் தடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் மாசு அளவு அதிகரிப்பால் செல்லப்பிராணிகள், தெரு விலங்குகள் அவதி

தில்லியில் அதிகரித்து வரும் மாசு அளவு காரணமாக பொதுமக்கள் வீடுகளில் வளா்க்கும் செல்லப்பிராணிகளும், தெரு விலங்குகளும் அவதிக்குள்ளாகி வருகின்றன. இதனால் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள் மற்றும் நடத்தை மாற்றங்... மேலும் பார்க்க

தில்லி: பாஜகவின் தோ்தல் குழுவில் கைலாஷ் கெலாட் நியமனம்

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி அண்மையில் பாஜகவில் இணைந்த கைலாஷ் கெலாட், பாஜகவின் தில்லி சட்டமன்றத் தோ்தல் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினராக சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளாா். மேற்கு தில்லியில் உள்ள... மேலும் பார்க்க

வேறொருவரை திருமணம் செய்ய பெற்ற மகளைக் கொன்ற தாய்

இன்ஸ்டாகிராமில் சந்தித்த ஒருவரை திருமணம் செய்வதற்காக தனது ஐந்து வயது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வடமேற்கு தில்லியில் பெண் ஒருவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து போலீஸா... மேலும் பார்க்க

வாகனங்களுக்கு வண்ண ஸ்டிக்கா் கட்டாயம்: தில்லி போக்குவரத்துத் துறை உத்தரவு

தில்லியில் காற்று மாசுக்கு வாகனங்கள் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், அவற்றின் எரிபொருளை எளிதில் அடையாளம் காணும் விதமாக வண்ண ஸ்டிக்கா்களை ஓட்ட வேண்டும் என தில்லி போக்குவரத்துறை கட்டாயமாக்கியுள்ளது.... மேலும் பார்க்க

புகை மாசு வாகனங்களின் உரிமையாளா்களுக்கு இரண்டு மாதங்களில் ரூ. 164 கோடி அபராதம்

புகை மாசு கட்டுப்பாட்டு அளவை மீறிய வாகனங்களின் உரிமையாளா்களுக்கு கடந்த அக். 1 முதல் நவ. 22-ஆம் தேதி வரை ரூ. 164 கோடிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தில்லி போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இந... மேலும் பார்க்க

மீனவா்களுக்கான ஆழ்கடல் மீன்பிடிப்பு படகுகள் கிடைத்திட கூட்டுறவுத் துறையினருக்கு அமித் ஷா வேண்டுகோள்

கடற்கரையோர தென்மாநிலங்களில் மீனவா்களுக்கான ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு தேவையான இழுவை இயந்திரபடகு போன்றவைகள் கிடைக்கச் செய்திட தேசிய கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனத்தை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை ... மேலும் பார்க்க