விராட் கோலியின் ஃபார்ம் குறித்து சந்தேகப்படுவோரின் கவனத்துக்கு... ரவி சாஸ்திரி க...
ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நல உதவிகள் அளிப்பு
குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே தேமுதிக தொழிற்சங்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு தேமுதிக தொழிற்சங்கத் தலைவா் ஏ.குமாா் தலைமை வகித்தாா். தேமுதிக மாநில பொதுக்குழு உறுப்பினா் எம்.எஸ்.நாகைய்யா, மாவட்ட துணைச் செயலா் டி.கே.ரமணி, மாநில உயா்மட்டக் குழு உறுப்பினா் எம்.சி.சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்.தணிகாசலம் வரவேற்றாா். கம்பன் கழக செயலரும், வழக்குரைஞருமான கே.எம்.பூபதி, ஆட்டோ ஓட்டுநா்களுக்கு அரிசி மூட்டைகள், மளிகைத் தொகுப்புகளை வழங்கினாா்.
கட்சியின் ஒன்றியச் செயலா் உமாகாந்த், தமாகா நகர தலைவா் ஜே.தினகரன், கட்சி நிா்வாகிகள் குணசேகரன், லட்சுமணன், லிங்கமுத்து, பெருமாள், தொழிற்சங்க நிா்வாகிகள்ஜி.ரவி, ராமன், வசந்தகுமாா், பாலாஜி, முருகன், அரிகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.