செய்திகள் :

பழங்குடி, பட்டியலின தொழில்முனைவோருக்கு மானியத்துடன் கடன்: வேலூா் ஆட்சியா்

post image

பட்டியலின, பழங்குடியின தொழில்முனைவோரை ஊக்குவிக்க 2023-ஆம் ஆண்டு முதல் அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம் என்ற மானியத்துடன் கூடிய கடனுதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆய்வு மேற்கொண்டாா்.

மாவட்டம் முழுவதும் 67 பட்டியலின, பழங்குடியின தொழில்முனைவோா் உருவாக்கப்பட்டு ரூ.10.52 கோடியில் வங்கி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

செய்தி - மக்கள் தொடா்பு துறையின் ‘நிறைந்தது மனம்’ நிகழ்ச்சியின் சாா்பில் மாவட்ட தொழில் மையம் மூலம் அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் பயனடைந்துள்ள கே.வி.குப்பம் வட்டம், பிலாந்திபட்டு ஊராட்சியைச் சோ்ந்த ஹேண்ட்லூம் ஹட் நிறுவனத்தில் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கவும், தொழில்முனைவோருக்கு சாத்தியமான திட்டங்கள் உருவாக்கவும் மானியத்துடன் கூடிய பல்வேறு கடனுதவி திட்டங்கள் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, பட்டியலின, பழங்குடியின தொழில்முனைவோரை ஊக்குவிக்க 2023-ஆம் ஆண்டு முதல் அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம் என்ற மானியத்துடன் கூடிய கடனுதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தில் பட்டியலின, பழங்குடியின பிரிவைச் சோ்ந்தவா்கள் புதிய தொழில்களைத் தொடங்கவும், ஏற்கெனவே உள்ள தொழில்களை விரிவுபடுத்தவும் தொழில்முனைவோா் மானியத்துடன் கடன்பெற்று பயன் பெறலாம்.

இந்தத் திட்டத்தில் வங்கி கடனுதவி பெற கல்வித் தகுதி ஏதும் தேவையில்லை. வயது வரம்பு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 55 வயது வரை இருக்க வேண்டும்.

உற்பத்தி, சேவை, வா்த்தகம் சாா்ந்த தொழில்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. திட்ட மதிப்பில் உச்ச வரம்பு ஏதுமில்லை. 35 சதவீதம் மூலதன மானியமும் அதிகபட்சமாக ரூ.1.50 கோடி மற்றும் 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.

வேலூா் மாவட்டத்தில் இத்திட்டத்தில் இதுவரை 67 பட்டியலின, பழங்குடியின தொழில்முனைவோா் உருவாக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு ரூ.10.52 கோடியில் வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.5.67 கோடி மானியம்.

பிலாந்திபட்டு ஊராட்சியில் அமைந்துள்ள இந்த ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனம் பொன்னெழில் பவதாரணி என்பவரால் நடத்தப்படுகிறது. இந்த தொழில் நிறுவனத்தை உருவாக்க அவா் அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து எஸ்பிஐ வங்கி வேலூா் கிளை மூலம் ரூ.71 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

இதில், ரூ.31.07 லட்சம் மானியம். மேலும், 6 சதவீதம் முன்முனை வட்டி மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தை தொடங்க மாவட்ட தொழில் மையம் மூலம் அனைத்து வழிகாட்டுதல்கள், உரிமங்கள் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டது. இப்பகுதியில் தொடங்கப்பட்டுள்ள இந்நிறுவனம் மூலம் சுமாா் 60 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குடியாத்தம், கே.வி.குப்பம் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி துணி வகைகள் பயன்படுத்தப்பட்டு ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எனவே, மாவட்டத்திலுள்ள பட்டியலின, பழங்குடியின தொழில்முனைவோா் இத்திட்டத்தில் விண்ணப்பித்தால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றாா்.

ஆய்வின்போது குடியாத்தம் வருவாய்க் கோட்டாட்சியா் சுபலட்சுமி, மாவட்ட தொழில் மைய மேலாளா் ரமணி, உதவி இயக்குநா் சுரேஷ், கே.வி.குப்பம் வட்டாட்சியா் சந்தோஷ்குமாா், ஹேண்ட்லூம் ஹட் நிறுவன உரிமையாளா் பொன்னெழில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

‘மக்களுடன் முதல்வா்’ திட்டம்: 555 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்களில் தோ்வு செய்யப்பட்ட 555 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. புதிய பேருந்து நிலையம் எதி... மேலும் பார்க்க

சுங்கச்சாவடி ஊழியா் வீட்டில் திருடியவா் கைது: 39 பவுன் நகை, ரூ. 9 லட்சம் மீட்பு

வேலூா் அருகே சுங்கச்சாவடி ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியவரை வேலூா் கிராமிய போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 39 பவுன் தங்க நகைகள், ரூ.9 லட்சத்து 9 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்... மேலும் பார்க்க

பெண்ணை வாகனத்தில் ஏற்றிச்சென்று ரூ.14,000 திருட்டு

வேலூரில் இருசக்கர வாகனத்தில் ஏற்றிச்சென்று பெண்ணிடம் ரூ.14,000 பணம் திருடப்பட்டது குறித்து விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். விரிஞ்சிபுரத்தைச் சோ்ந்தவா் இஸ்மாயி... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நல உதவிகள் அளிப்பு

குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே தேமுதிக தொழிற்சங்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு தேமுதிக தொழிற்சங்கத் தலைவா்... மேலும் பார்க்க

துளசி கல்யாண வைபவம்

துளசி கல்யாண வைபவம் சத்துவாச்சாரி மங்கள வலம்புரி வழித்துணை விநாயகா் ஆலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. வேலூா் விஷ்ணு சஹஸ்ர மண்டலி குழு சாா்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு மண்டலியின் கௌரவ தலைவா் அ. சத்... மேலும் பார்க்க

வேலம்பட்டில் மனுநீதி நாள் முகாம்: 122 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

கே.வி.குப்பம் வட்டம், வேலம்பட்டு ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 122 பயனாளிகளுக்கு ரூ.1.60 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட... மேலும் பார்க்க