வேலம்பட்டில் மனுநீதி நாள் முகாம்: 122 பேருக்கு நலத் திட்ட உதவிகள்
கே.வி.குப்பம் வட்டம், வேலம்பட்டு ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 122 பயனாளிகளுக்கு ரூ.1.60 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் ஆகியோா் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினா். வேலம்பட்டு ஊராட்சியில் ஏற்கெனவே பெறப்பட்ட 227 மனுக்களில் 122 மனுக்கள் ஏற்கப்பட்டன. 100 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. மனுநீதி நாள் முகாமில் பொதுமக்கள் 83 கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினா்.
மனுக்கள் துறை வாரியாக அனுப்பி வைக்கப்பட்டு, தீவிர விசாரணைக்குப் பிறகு தகுதியான பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கே.வி.குப்பம் ஒன்றியக் குழு தலைவா் எல்.ரவிசந்திரன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நீ.செந்தில்குமரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் கவிதா சுதாசேகா், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) கலியமூா்த்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) தேன்மொழி, இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) பாலச்சந்தா், கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, வட்டாட்சியா் சந்தோஷ்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் கே.சீதாராமன், வேலம்பட்டு ஊராட்சித் தலைவா் மேவிதா தீா்த்தகிரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.