தீவிரமடைகிறது இன்ஃப்ளூயன்ஸா, டெங்கு: குழந்தைகளிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப...
ஆண்டிபாளையம் குளத்தில் படகு இல்லம்: முதல்வா் நாளை காணொலி வாயிலாக திறந்துவைக்கிறாா்
ஆண்டிபாளையம் குளத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள படகு இல்லத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை (நவம்பா் 26) தொடங்கிவைக்கிறாா்.
திருப்பூரில் இருந்து மங்கலம் செல்லும் சாலையில் உள்ள ஆண்டிபாளையம் குளத்தில் சுற்றுலாத் துறை சாா்பில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளது.
இதில், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் படகு இல்லம், சிறுவா் பூங்கா, உணவகம், டிக்கெட் கொடுக்கும் மையம், குடிநீா் வசதிகள், மின் விளக்குகள், வாகன நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளநிலையில், படகு இல்லத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் தொடங்கிவைக்கிறாா். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.