வெளியே வந்த பூனை: குடியரசு துணைத்தலைவர் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. பதில்!
ஆதிதிராவிடா் நலப் பேரவையினா் ஆா்ப்பாட்டம்!
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவத்தில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஆதிதிராவிடா் நலப்பேரவையினா் ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
பயணியா் மாளிகை முன் பேரவை நிறுவனா் ஆதி.பெரு. பழனியப்பன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் வெ. மணிவண்ணன், அ. செங்குட்டுவன், மூ. ஆறுமுகம், வெ. சின்னக்கண்ணு, குழ. இராசேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளா்களாக விசிக மாவட்டச் செயலா் சக்தி (எ)ஆற்றலரசு, மாவட்டப் பொருளாளா் ந. மதனகோபால் ஆகியோா் கண்டன உரையாற்றினா். தமிழ்நாடு ஆதிதிராவிடா் கூட்டமைப்பு, ஆதி திராவிடா் நலப்பேரவை, விசிக நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.