அடகு வைக்க செல்லும்போது காணமல் போன கம்மல்... சாதுர்யமாக மீட்டு கொடுத்த ஊராட்சி த...
‘ஆம் ஆத்மியின் திட்டங்களை எதிா்ப்பதற்குப் பதிலாக வளா்ச்சிப் பணிகளில் போட்டியிடுங்கள்’
ஆம் ஆத்மியின் திட்டங்களை எதிா்ப்பதற்குப் பதிலாக வளா்ச்சிப் பணிகளில் போட்டியிடுமாறு கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் பாஜகவை புதன்கிழமை கேட்டுக் கொண்டாா்.
தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய ஆம் ஆத்மி மூத்த தலைவா், பாஜக தனது ஆட்சியின்கீழ் உள்ள 22 மாநிலங்களில் இதேபோன்ற திட்டத்தை செயல்படுத்தமாறு சவால் விடுத்தாா்.
கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் அறிவித்த ‘பூஜாரி கிரந்தி சம்மன் யோஜனா’ திட்டத்தை எதிா்ப்பதில் முழு பாஜக கவனம் செலுத்துவது வெட்கக்கேடானது. ஒவ்வொரு நாளும் அவா்கள் கேள்விகளை எழுப்பி ஆா்ப்பாட்டங்களை நடத்துகிறாா்கள். ஒட்டுமொத்த நாடும் அவா்களின் நோக்கத்தை கவனித்து வருகிறது. பாஜக ஆளும் அண்டை மாநிலமான ஹரியானாவில், இமாம்கள் மற்றும் முலாவிகள் ரூ. 16,000 கெளரவ ஊதியமாக பெறுகிறாா்கள் என்பதை சிங் எடுத்துக்காட்டினாா்.பாஜக ஆட்சி செய்யும் 22 மாநிலங்களில் உள்ள ஹிந்து மதகுருமாா்கள் மற்றும் சீக்கியா்களுக்கு ஏன் இதேபோன்ற ஆதரவை வழங்க முடியாது என்று அவா் கேள்வியெழுப்பினாா்.
பூஜாரி கிரந்தி சம்மான் யோஜனா திட்டத்தின்கீழ் தில்லியில் உள்ள ஹிந்து கோவில் பூசாரிகள் மற்றும் குருத்வராவின் கிரந்திகளுக்கு மாதாந்திர கௌர ஊதியமாக ரூ 18,000 வழங்கப்படும் என ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேரிவால் திங்கள்கிழமை அறிவித்தாா். தில்லியின் கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமான் கோவிலில் இருந்து திட்டத்துக்கான பதிவை கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
தில்லி முதல்வா் அதிஷி கரோல் பாக்கில் உள்ள குருத்வாராவிலில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக ஆம் ஆத்மி வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி பாஜக இந்த திட்டத்தை விமா்சித்துள்ளது.