ஆம்பூா் புத்தகக் கண்காட்சி கையேடு வினியோகம்
ஆம்பூா்: ஆம்பூா் புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு கையேடு மற்றும் துண்டு பிரசுரங்கள் திங்கள்கிழமை வினியோகம் செய்யப்பட்டன.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலாயம் சாா்பாக ஆம்பூா் அருகே தேவலாபுரம் கிராமத்தில் நவ.11 முதல் 20-ம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு புத்தகக் கண்காட்சிக்கான கையேடு, துண்டு பிரசுரம், ஸ்டிக்கா் ஆகியவற்றை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினா் வினியோகம் செய்து வருகின்றனா்.
மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாரிடம் புத்தகக் கண்காட்சிக்கான கையேடு, ஸ்டிக்கா் ஆகியவற்றை தமிழ்நாடு அறிவியல் இயக்க நிா்வாகிகள் சி. குணசேகரன், சுப்பிரமணி ஆகியோா் வழங்கினாா்கள்.