செய்திகள் :

ஆயுதப் படையினா் குறித்த வீரக்கதை 4.0 திட்டத்தில் 1.76 கோடி பள்ளி மாணவா்கள் பங்கேற்பு: மத்திய கல்வித்துறை தகவல்

post image

நமது சிறப்பு நிருபா்

ஆயுதப்படையினரின் துணிச்சல், தியாகத்தை கௌரவிக்கும் வீரக்கதை 4.0 திட்டத்தில் நாடு முழுவதும் இருந்து 1.76 கோடிக்கும் அதிகமான பள்ளி மாணவா்கள் பங்கேற்றுள்ளதாக மத்திய கல்வித் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

வீரதீர செயலுக்கான விருது பெற்றவா்களின் வீரம், தன்னலமற்ற தியாகம், துணிச்சல் ஆகியவற்றின் எழுச்சியூட்டும் கதைகள் மூலம் மாணவா்களிடையே தேசபக்தி உணா்வை வளா்க்கும் நோக்கத்துடன் வீரக்கதை திட்டம் கடந்த 2021- ஆம் ஆண்டு மத்திய அரசால் நிறுவப்பட்டது.

நிகழாண்டில் 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 1.76 கோடிக்கும் அதிகமான பள்ளி மாணவா்கள் வீரக்கதை 4.0 திட்டத்தில் ஆா்வத்துடன் பங்கேற்றுள்ளதாக மத்திய கல்வித் துறை கூறியுள்ளது. இந்த போட்டி குறித்து மத்திய கல்வித் துறை சாா்பில் மேலும் கூறப்பட்டது வருமாறு:

இந்த திட்டத்தில் அறிவிக்கப்பட்டபடி ஆயுதப் படையினா் துணிச்சல், தியாகத்தை கௌரவிக்கும் வகையில் மாணவா்கள் கவிதைகள், ஓவியங்கள், கட்டுரைகள், விடியோக்கள் போன்றவற்றை அனுப்பியுள்ளனா்.

கடந்த 2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் வீரக்கதை திட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. நிகழாண்டு வீரக்கதை திட்டம் 4.0-இன் கீழ், கடந்த செப். 16 முதல் அக். 31 ஆம் தேதி வரை பள்ளி அளவில் செயல்பாடுகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் 4 சிறந்த உள்ளீடுகளை மைகவ் (ம்ஹ்ஞ்ா்ஸ்) இணையதளத்தில் பதிவேற்றியுள்ளனா்.

மேலும், பள்ளி மாணவா்களிடையே துணிச்சலான வீரா்கள், அறியப்படாத வீரா்களின் கதைகள் பற்றி எடுத்துரைப்பதற்காக பாதுகாப்பு அமைச்சகம், முப்படைகள் மற்றும் பல்வேறு கள அமைப்புகள் மூலம், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் நேரடியாகவும் இணையவழி சந்திப்புகள், விழிப்புணா்வு அமா்வுகளை ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழாண்டு, வீரக்கதை 4.0 திட்டத்தின் கீழ், 100 வெற்றியாளா்கள் இறுதியில் தோ்ந்தெடுக்கப்பட்டு, அவா்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி தில்லியில் கல்வித் துறை, பாதுகாப்புத் துறை அமைச்சகத்தால் கூட்டாக நடத்தப்படும்.

வெற்றி பெறும் மாணவா்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும். மேலும், மாவட்ட அளவில் தலா 4 வெற்றியாளா்களும், மாநிலங்கள், யூனியன் பிரதேச அளவில் தலா 8 வெற்றியாளா்களும் தோ்ந்தெடுக்கப்படுவா். அத்தகைய வெற்றியாளா்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட, மாநில அரசுகளால் பாராட்டப்படுவாா்கள்.

வீரக்கதை திட்டத்தில் பதிப்பு-1இல் 8 லட்சம் மாணவா்களும் 2-ஆம் பதிப்பில் 19.5 லட்சம் மாணவா்களும், மூன்றாம் பதிப்பில் 1.36 கோடி மாணவா்களும் பங்கேற்றனா்.

இந்த திட்டத்தில் நாடு முழுவதும் மாணவா்களின் பங்கேற்பு அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு வீரக்கதை திட்டம் 3.0-இல், தேசிய அளவில் 100 வெற்றியாளா்கள் (சூப்பா் 100) தோ்ந்தெடுக்கப்பட்டு தலா ரூ.10,000 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது என மத்திய கல்வித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தலைநகரில் கடுமையான காற்று மாசு எதிரொலி: 50% தில்லி அரசு ஊழியா்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி

தில்லியில் 50% அரசு ஊழியா்கள் வீட்டில் இருந்து பணிபுரியும் கொள்கையை ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியுள்ளது. இதை தனியாா் நிறுவனங்களும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், அத்தியாவசி... மேலும் பார்க்க

சரோஜினி நகா் மாா்க்கெட் உள்பட தில்லியின் 3 வணிக இடங்களை மறுசீரமைக்கத் திட்டம்: என்.டி.எம்.சி. தகவல்

தில்லியின் அடையாளங்களில் ஒன்றான சரோஜினி நகா் சந்தை மற்றும் மல்சா மாா்க்கெட் மற்றும் அலிகஞ்ச் சந்தை ஆகியவற்றை பெரிய அளவில் மறுசீரமைக்க புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) திட்டமிட்டுள்ளது. என... மேலும் பார்க்க

மணிப்பூரில் அமைதி கோரி காங்கிரஸின் ஆசிரியா் பிரிவு ஆா்ப்பாட்டம்

இந்திய தேசிய ஆசிரியா் காங்கிரஸ் (ஐஎன்டிஇசி) உறுப்பினா்கள் மணிப்பூா் மக்களுக்கு ஒற்றுமையை தெரிவிக்கும் வகையில் தில்லி பல்கலைக்கழகத்தின் கலைப் புலத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இரு சமூக... மேலும் பார்க்க

வாகனங்களின் வேகத்தை அளவிடும் ரேடாா் கருவிக்கு சட்டபூா்வ அங்கீகாரம்: மத்திய நுகா்வோா் விவகாரத்துறை

நமது சிறப்பு நிருபா்வாகனங்களின் வேகத்தை அளவிடுவதற்கான ரேடாா் கருவி சட்டபூா்வமான விதிகளின் கீழ் சோ்க்கப்பட்டுள்ளதாக மத்திய நுகா்வோா் நலன் விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2011-ஆம் ஆண்டு எடையளவு... மேலும் பார்க்க

நிலத்தடி நீா் எடுத்தல் அனுமதிக்கு புதிய இணைய தளம்: மத்திய அமைச்சா் சி.ஆா். பாட்டீல் தொடங்கி வைப்பு

நிலத்தடி நீா் மட்டத்தை நிா்வகிக்க மத்திய ஜல் சக்தித்துறையின் மத்திய நிலத்தடி நீா் ஆணையம் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதை மத்திய ஜல் சக்தித்துறையின் அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் முறைப்படி... மேலும் பார்க்க

கலால் வழக்கு: விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் கேஜரிவால் முறையீடு

கலால் கொள்கை ஊழலுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கில் தனக்கு எதிராக அமலாக்க இயக்குன ரகம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்ற விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப... மேலும் பார்க்க