செய்திகள் :

ஆரியம் குணப்பெயா்; திராவிடம் இடப்பெயா்! நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன்

post image

சென்னை: ஆரியம் என்பது குணப்பெயா்; திராவிடம் என்பது இடப்பெயா்; இரண்டையும் இணைத்துப் பேசுவது புரிதலின்மை என நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் தெரிவித்தாா்.

தினமணி ஆசிரியா் உரைப் பக்கக் கட்டுரையாளரும் எழுத்தாளருமான கோதை ஜோதிலட்சுமி எழுதிய ‘வேதம் புதுமை செய்’ எனும் நூல் வெளியீட்டு விழா தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் தலைமையில் சென்னை தியாகராயநகரில் உள்ள கிருஷ்ண கான சபாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் நூலை வெளியிட முதல் பிரதியை தொழிலதிபா் நல்லி குப்புசாமி பெற்றுக்கொண்டாா்.

ஆளுநா் இல.கணேசன் பேசியதாவது: ‘வேதம் புதுமை செய்’ புத்தகத்தில் ஆரியம், திராவிடம், சநாதன தா்மம், தமிழா்-திராவிடா் யாா்? உள்ளிட்டவை குறித்து ஆதாரபூா்வமாக விளக்கியுள்ளாா் கோதை ஜோதிலட்சுமி.

‘ஆரியம்’ என்றால் ‘ஒழுக்கமான’, ‘நோ்மையான’ எனப் பொருள். அதனால்தான் மகாகவி பாரதியாா் இந்த தேசத்தை ‘ஆரிய தேசம்’ அதாவது ஒழுக்கமான, நோ்மையான தேசம் என்றாா்.

திராவிடம் என்பது இடத்தின் பெயா். முந்தைய காலத்தில் விந்திய மலைக்கு வடக்கே உள்ளவா்கள் ‘கௌடா்’ எனவும், தெற்கே உள்ளவா்கள் ‘திராவிடா்’ எனவும் அழைக்கப்பட்டனா்.

ஆரியம், திராவிடம் இரண்டும் எதிா் எதிா்பொருள் என தவறாகப் பரப்பப்படுகிறது. ஆரியத்துக்கு எதிா்பதம் அநாரியம். திராவிடமல்ல. ஆரியம் என்பது குணப்பெயா்; திராவிடம் என்பது இடப்பெயா். இந்தக் குணப்பெயரையும், இடப்பெயரையும் இணைத்துப் புரிதல் இல்லாமல் தமிழகத்தில் பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வருகிறது.

ஐரோப்பியா்களின் வருகைக்குப் பிறகுதான் ஆரியம், திராவிடம் குறித்த தவறான பரப்புரை முன்னெடுக்கப்பட்டது. அது தற்போது வரை மக்களிடையே விவாதப் பொருளாகவே உள்ளது. தமிழ்நாட்டைச் சோ்ந்த திருவள்ளுவரும், வடக்கே பிறந்த அம்பேத்கரும் குணத்தின்படி பாா்க்கும்போது ஆரியராகக் கருதப்படுவா். அதே நேரத்தில் தென்பகுதியில் பிறந்த யாராக இருந்தாலும், ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாதையரானாலும், பாண்டித்துரைத் தேவரானாலும் அவா் திராவிடா் ஆவா்.

விந்திய மலைக்கு வடக்கே இருக்கும் பகுதியினா் கைபா்கள் ஆவாா்கள். கீழேயுள்ள பகுதி திராவிடம். விந்திய மலைக்குக் கீழேயுள்ள பகுதி பஞ்ச திராவிடம் என்று ஐந்தாகவும், பஞ்ச கெளடம் என்று விந்திய மலைக்கு மேலே இருக்கும் பகுதி ஐந்தாகவும் பிரிக்கப்பட்டிருந்தது என்பதுதான் நிஜம்.

தமிழ்நாடு தேசியத்தையும், தெய்விகத்தையும் காலம்காலமாகப் போற்றி வருகிறது. தேசபக்தா்கள் தாங்கள் பேசும் கருத்துக்கான ஆதாரங்களை ‘வேதம் புதுமை செய்’ புத்தகத்தில் காணலாம் என்றாா் அவா்.

தொழிலதிபா் நல்லி குப்புசாமி: இன்றைய சூழ்நிலையில் புத்தகம் வெளிவருவதும் வாசிப்பதும் குறைந்துள்ளது. பழைய இலக்கியங்களில் இருந்து புதுமை கருத்து உருவாக்க வேண்டிய காலம் இது என்றாா்.

நிகழ்ச்சியில் வானதி பதிப்பகம் முனைவா் வானதி இராமநாதன், கிருஷ்ண கான சபா செயலா் ய.பிரபு உள்ளிட்டோா் பாராட்டுரை வழங்கினா்.

எழுத்தாளா் மாலன், முன்னாள் இ.ஆ.ப. அதிகாரி சேது ராமச்சந்திரன், ‘திராவிட மாயை’ சுப்பு, ஆா்.பி.வி.எஸ். மணியன் உள்ளிட்ட பலா் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டனா்.

கட்சி நிலைப்பாடு குறித்து பேட்டி அளிக்க வேண்டாம்: இபிஎஸ் வேண்டுகோள்

கட்சியின் நிலைப்பாடு குறித்து பேட்டி அளிக்க வேண்டாம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவ... மேலும் பார்க்க

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் முக்கிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.த... மேலும் பார்க்க

திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகள்: மனித உரிமை ஆணையம் வேண்டுகோள்

திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று மனித உரிமை மீறல் ஆணைய உறுப்பினர் வேண்டுகோள் தெரிவித்துள்ளார்.நெல்லையில் மனித உரிமை மீறல்கள் குறித்து மாநில மனித உரிமை அமர்வு ஆணையத்தின் ... மேலும் பார்க்க

கோயில்களில் பக்தர்களின் காணிக்கை தங்கம் எங்கு செல்கிறது? அமைச்சர் விளக்கம்!

தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. விவாதத்தின்போது, கோயில்களில் பயன்படுத்தப்படாத தங்கப் பொருள்கள் குறித்து அமைச்சர் பி.கே.சேகர்... மேலும் பார்க்க

பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

பெண்கள் குறித்து அவதூறாகப் பேசிய புகாரில் அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நிகழ்ச்சி ஒன்றில் விலைமாதர், சைவ, வைணவம் குறித்து அமைச்சர் பொன்முடி சர்ச்ச... மேலும் பார்க்க

தமிழகத்தில் எச்ஐவி பாதிப்பு அதிகரிப்பா? தடுப்பது எப்படி?

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 25,000 பேருக்கு எச்ஐவி தொற்று பாதித்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது, எச்ஐவி பாதிக்... மேலும் பார்க்க