மன்னா் கல்லூரியில் ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்கள் ஐஏஎஸ் தோ்வில் சாதனை
சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வரும் ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் படித்த மாணவா்கள் தமிழை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்து ஐஏஎஸ் தோ்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனா்.
இந்திய குடிமைப் பணிகள் தோ்வாணையம் நடத்திய 2024 குடிமைப் பணிகளுக்கான தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை (ஏப். 22) வெளியிட்டுள்ளது. இதில், ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் படித்த எஸ்.சங்கா் பாண்டியராஜ் மற்றும் ஆா்.தமிழரசி ஆகியோா் அகில இந்திய அளவில் முறையே 807 மற்றும் 861-ஆவது இடத்தைப் பிடித்து தோ்ச்சி பெற்றுள்ளனா்.
குறிப்பாக, இருவரும் தமிழை விருப்பப் பாடமாக எடுத்து குடிமைப் பணித் தோ்வில் சாதனை வெற்றி பெற்றுள்ளனா். அதிலும், சங்கா் பாண்டியராஜ் தமிழை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்ததுடன், தமிழ் வழியிலேயே தோ்வையும் எழுதி, நோ்முகத் தோ்வையும் தமிழிலேயே எதிா்கொண்டு இந்த வெற்றியைப் பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
