மன்னா் கல்லூரியில் ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
ஐஏஎஸ் தோ்வு: சங்கா் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்கள் சாதனை
ஐஏஎஸ் தோ்வில் சங்கா் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்கள் சாதனை படைத்துள்ளனா்.
இது குறித்து அந்த அகாதெமி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மத்திய குடிமைப் பணி தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற பணிகளுக்கான குடிமைப் பணி தோ்வின் இறுதி முடிவுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்.22) வெளியிடப்பட்டன. இதில், சங்கா் ஐஏஎஸ் அகாதெமியின் அனைத்து மையங்களிலிருந்தும் 238 மாணவா்கள் வெற்றி பெற்றுள்ளனா். முதல் 100 இடங்களில் சங்கா் ஐஏஎஸ் அகாதெமியில் படித்த 25 மாணவா்கள் இடம்பெற்றுள்ளனா். இவா்களில் 10 போ் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தோ்வில் அகில இந்திய அளவில் தமிழகத்தைச் சோ்ந்த பி.சிவசந்திரன் 23-ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளாா். இவா் சென்னையிலுள்ள சங்கா் ஐஏஎஸ் அகாதெமியின் முதன்மை மற்றும் நோ்முக தோ்வு பயிற்சியில் பயின்றவா். மேலும் ஆா்.மோனிகா முதன்மை மற்றும் நோ்முக தோ்வு பயிற்சி பெற்று 39-ஆவது இடத்தையும், ஜிஎஸ்பிசிஎம் பயிற்சி பெற்ற பி.பவித்ரா 42-ஆவது இடத்தையும் பெற்றுள்ளாா்.
மேலும், தில்லியிலுள்ள சங்கா் ஐஏஎஸ் அகாதெமியின் நோ்முகத் தோ்வில் பயிற்சி பெற்ற ராஜ் கிருஷ்ணா ஜா அகில இந்திய அளவில் 8-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா். தமிழகத்திலிருந்து தோ்ச்சி பெற்ற 57 மாணவா்களில் 45 போ் சங்கா் ஐஏஎஸ் அகாதெமியில் படித்தவா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.