செய்திகள் :

'இதற்காகத்தான் புத்தகக் கடையைத் தொடங்கினேன்...' - லூயிஸ் மிஷாவ் - ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை 8

post image
மிஷாவ் அவர்கள், பேராசிரியர் என்றழைப்பதற்கு மிக மிகப் பொருத்தமானவர் என்பதைக் என் உள்மனம் ஒப்புக்கொண்டது.

தான் எப்படி புத்தகக் கடை வைக்கும் முடிவுக்கு வந்தேன் என்பதை, சித்தாந்த பயிலரங்கில் உரையாற்றுவதுபோல விளக்கினார். சாதாரணமாகப் பேசும்போது, பேச்சு வழக்கில் இயல்பாகவும் கிண்டலாகவும் பேசிக்கொண்டு வந்தவர், புத்தக விற்பனை நிலையம் தொடங்கும் முடிவுக்கு ஏன் வந்தேன் என்பதை விவரிக்கும் போது, ஆற்றொழுக்கான நடையில் மேடையில் உரை நிகழ்த்தும் பாங்கைக் கைக்கொண்டார். நான் அமைதியாக கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

லூயிஸ் மிஷாவ்

“அமெரிக்காவில் உள்ள கறுப்பர்கள் சொர்க்கத்திற்கு சென்று விடுவோம் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். இந்தப் பூமியில் மறுக்கப்பட்ட எல்லா உரிமைகளையும் வசதிகளையும் சொர்க்கத்தில் அனுபவிப்போம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையோடு வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்கள் சொர்க்கத்தில் எதிர்பார்க்கும் அத்தனையும் பூமியிலேயே கிடைக்கிறதே… அதை இங்கு அடைய முடியாது என்றும் அதனை பூமியிலேயே அடைய ஆசைப்படக்கூடாது என்பதிலும் அவர்கள் தங்களுக்கு தாங்களே சமாதானம் சொல்லிக் கொள்கிறார்கள். 

“கறுப்பனுக்கு ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும். ஆமாம், அவனுக்கு இந்தப் பூமியில் ஒரு வேலை கிடைத்தால் போதும். எவ்வளவு ஊதியம் கிடைக்கும் என்பதைப் பற்றிகூட அவன் கவலைப்படுவதில்லை. செய்வதற்கு ஒரு வேலை கிடைத்தால் போதும். வேலை தேடும்போது சம்பளம் பற்றியெல்லாம் அவனுக்கு அக்கறை இருக்காது. வேலை கிடைத்தால் போதும், அவ்வளவுதான். இந்த மனைநிலைக்கு கறுப்பர்கள் எப்படி வந்தார்கள்? கறுப்பனின் உள்ளுணர்விலேயே இது பதிந்துபோய் விட்டதே, இதற்கு என்ன காரணம்?

வேலைக்காக போராடிய அமெரிக்க கறுப்பர்கள்

“எந்த வேலை செய்தாலும், எவ்வளவு குறைவான வருமானம் வந்தாலும் திருப்தியாக வாழ வேண்டும்; அதைத்தான் கடவுள் விரும்புகிறார். இயேசுவின் விருப்பத்திற்கு இசைய வாழ்ந்தால்தான், இறப்பிற்குப் பின் சொர்க்கம் செல்ல முடியும் என்று அருட்திரு பாதிரியார்கள் பிரசங்க மேடைகளில் மொழிவதைக் கேட்டுக் கேட்டுப் பழகிப் போய் கறுப்பர்கள் இந்த அவலமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு மாற்றமாக எந்த பாதிரியாராவது உபதேசிக்கிறார்களா?

“பசியோடு திருப்தி அடைந்து கொள்வதை கடவுள் விரும்புகிறார் என்ற கருத்தை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? ஆனால், காலங் காலமாக கறுப்பர்களுக்கு இப்படித்தானே போதனை செய்யப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்…” அமைதியாக இருந்தார். அந்த அறையில் இருந்தவர்களும் பேராசிரியரின் பேச்சை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தனர். புத்தகக் கடையில் வேலை பார்த்த ஆலிவ் பேட்ச் அப்போதுதான் உள்ளே வந்திருந்தார். ஓர் உக்கிரத்தோடு பேசிக் கொண்டிருந்ததால் வந்தவர் மிஷாவ்வை நலம் விசாரிக்கக் கூட இல்லை.

“இந்தப் பின்னணியில் சிந்திக்க சிந்திக்க, அப்பாவோடு உரையாற்றிய நாட்களெல்லாம் என் நினைவுக்கு வந்தன. மார்கஸ் கார்வே நமக்கு கற்றுக் கொடுத்தது என்ன? கறுப்பர்கள் பற்றி, கறுப்பர்களின் உள்ளத்தில் உள்ளதைப் பற்றி முதலில் அறிய வேண்டும். பின்னர் கறுப்பர்களின் உள்ளங்களில் படிந்து உறைந்து போயுள்ள உலுத்துப் போன கருத்துக்களை மாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியதே என் நினைவுக்கு வந்தது. 

மார்கஸ் கார்வே

“தான் அடிமையாக இருக்கவே பிறந்தவன் என்ற சிந்தனையிலிருந்து கறுப்பர்கள் வெளியே வர, அவனுக்கு கல்வி அவசியம். ஆனால், கெடுவாய்ப்பாக கல்வி நிலையங்களில் என்ன கற்றுக் கொடுக்கப்படுகிறது? வெள்ளையர்களைப் பற்றி அறிந்து கொள்வதைத்தானே. வெள்ளைக்காரனைப் பற்றி தெரிந்து கொண்டதற்காகவே பட்டம் பெறுகிறான். கறுப்பன் தன்னைப் பற்றி அறிந்து கொள்வதற்கு கல்வி நிலையங்களில் ஏதாவது பாடங்கள் உள்ளதா? கல்வி நிலையங்களில் கறுப்பர்கள் அறிந்து கொள்வது அடிமைத்தனத்தைத்தானே. அடிமைத்தனம் என்பது ஓர் இனத்தின் வரலாறா? அது ஓர் இனத்தின் அவலம் அல்லவா… கறுப்பர்களுக்கு இன மானம் குறித்த அக்கறை வேண்டும்; கவலை வேண்டும்; அடிமைத்தனத்திலேயே உழல்வதிலிருந்து வெளியே வர வேண்டும் என்ற பெரு விருப்பு வேண்டும்.

“இதற்கு கறுப்பனுக்குத் தேவை அறிவு. இதனைப் பற்றிய அறிவை, இப்போதிருக்கும் எந்தக் கல்வி நிலையங்களிலும் அவன் பெற்றுக்கொள்ள முடியாது. அவனே முயன்று பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த அறிவு ஒரு சில கறுப்பின மனிதர்களின் ஆழ் மனதிலும் ஆன்மாவிலும் உள்ளது. அதேசமயம் நான் படித்த சில புத்தகங்களிலும் இந்த அறிவு இருக்கின்றது. அந்தப் புத்தகங்களைப் பற்றி கறுப்பர்கள் தெரிந்து கொள்ளவேண்டும். அந்தப் புத்தகங்களை கறுப்பர்கள் வாசிக்க வேண்டும்…”

ஆவேசம் அவருடைய பேச்சில் இருந்தது, புற்றுநோய் அவஸ்தையையும் மீறி மிஷாவ்வின் வார்த்தைகளில் ஓர் உணர்ச்சி வெளிப்பட்டது. ஆலிவ் பேட்ச் பக்கம் திரும்பினார். அவரின் கைகளைப் பற்றிக் குலுக்கினார். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.

“கறுப்பர்கள் அறிவைப் பெற வேண்டும் என்ற புள்ளியிலிருந்துதான் புத்தகக் கடை தொடங்குவதற்கான உந்துதலைப் பெற்றீர்கள். அப்படித்தானே…” இந்தக் கேள்வியிலிருந்துதான் நேர்காணலின் மையப் புள்ளி தொடங்குவதாக நினைத்துக் கொண்டேன்.

“ஆமாம்… ஆனா, உணர்ச்சி வேகத்துல எடுத்த முடிவு இல்ல. புத்தகம் வித்து காலத்தை ஓட்ட முடியாதுன்னு எனக்குத் தெரியாதா. ஒரு விஷயத்துல இறங்கிட்டா அதனோட ஆழ அகலங்கல தெரிஞ்சிக்கிட்டு இறங்கணும். இறங்கிட்டா அதுல இருந்து பின் வாங்கக்கூடாது. அதனால, ஓர் உந்துதலில் புத்தகக் கடை திறக்கும் முடிவுக்கு வந்துவிட்டேன் எனச் சொல்ல முடியாது, கருத்தியல் பின்னணியே தூண்டுகோலா இருந்துச்சின்னு சொல்வேன்…”

ஃபிரடெரிக் டக்ளஸ்

“விவரமா சொல்ல முடியுமா?” சொல்றேன்… ஃபிரடெரிக் டக்ளஸ் சொன்னதுதான் என் உள்ளத்தில் ஆழமாக அப்போது பதிந்திருந்தது. கறுப்பர் இன மக்கள் கல்வி கற்றால், ஒரு நல்ல அடிமையை நாம் இழந்து விடுவோம் என தன்னுடைய எஜமானியிடம் எஜமானர் (வெள்ளைக்காரர், அவருடைய மனைவியிடம்) - கூறியதைக் கேட்டிருக்கிறார் அடிமையாக இருந்த டக்ளஸ். அவர் போராடும் உணர்வைப் பெற்ற தருணம், நாள் அதுதான். 

“கறுப்பின மக்கள் வாசிக்கக் கற்றுக்கொண்டால் அவன் அடிமையாக இருக்க மாட்டான் என்பதுதான் வெள்ளையனின் எண்ணம். ஃபிரடெரிக் டக்ளஸ் வாசிக்கக் கற்றுக் கொண்டார். அத்தோடு அவர் நின்றுவிடவில்லை, மற்ற கறுப்பர்களுக்கும் ரகசியமாக வாசிக்கக் கற்றுக்கொடுத்தார். கறுப்பின மக்களை மேம்படுத்த ஏதாவது செய்வதில்தான் தன்னுடைய ஆன்மாவின் மகிழ்ச்சி இருப்பதாக டக்ளஸ் கூறியிருக்கிறார். அவர் சொன்ன அந்த வார்த்தைதான் எனக்கும் உந்துதல்…”

“வாவ்… ஓர் உயரிய நோக்கம் உங்களுடைய இலக்கில் இருந்துள்ளது. அந்த நோக்கத்தை பரிபூரணமாக எட்டியும் விட்டீர்கள். அதெல்லாம் சரி, குடும்பத்தினரின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது?”

லூயிஸ் மிஷாவ்

"சரியா கேட்டீங்க… என் மனைவி வில்லியிடம், புத்தகக் கடை வைக்கப் போவதாகச் சொன்னேன். அதைக் கேட்டவர் மெலிதாகச் சிரித்தார். தலையை மேலும் கீழும் அசைத்தவர் பைபிளை எடுத்து வாசிக்கத் தொடங்கினார். இதைவிட மோசமாக  என்னை அவர் கேவலப்படுத்தி இருக்க முடியாது. அவர் எனக்கு மனைவி என்பதை விட, தேவாலயத்தின் மருமகள் என்பதில்தான் திருப்தி அடைந்தார். அவரிடம் வேறு என்ன எதிர்வினையை எதிர்பார்க்க முடியும்?”

- பக்கங்கள் புரளும்

புகை - சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

சாகித்ய அகாதமி விருது பெறும் எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி

மத்திய அரசின் சார்பில், ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருது சாகித்ய அகாதமி விருது (Sahitya Akademi Award). பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் ... மேலும் பார்க்க

`நான் வேற மாதிரி கறுப்பன்' - ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை 7

‘சூதாட்டத் தொழில் ஈடுபட்டு மனம்திருந்தி திரும்பினாலும், அந்தப் பாவக் கறை எப்போதும் அழியாது’ என்ற குற்றப் பார்வை லூயிஸ் மிஷாவ் மீது படிந்திருந்தது.தேவாலயப் பணிகளில் இருந்து விலக இது காரணமாக இருக்கலாம் ... மேலும் பார்க்க

மதன் எழுதிய Blockbuster தொடர் 'வந்தார்கள் வென்றார்கள்'.. இப்போது Audio வடிவில் | Vikatan Play

ஆண்டியாக இருந்தாலும் சரி, அலெக்ஸாந்தராக இருந்தாலும் சரி, வடக்கிலிருந்து இந்தியத் துணைக் கண்டத்துக்குள் நுழைய வேண்டுமென்றால் - விண்ணை முட்டும் இமயமலைத் தொடரைத் தாண்டியாக வேண்டும். அல்லது வெள்ளம் பெருக்... மேலும் பார்க்க

சிறை, கடவுள் நம்பிக்கை, பேராசிரியர் - ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை 6

ஒரு கண் பார்வை இழந்த, அந்த கசப்பான தருணங்களை விவரித்த புரஃபஸர் மிஷாவ், தன்னோட அண்ணன் தனக்கு உதவி செய்ததாகச் சொல்லியதை, எப்படி உதவினார் என விரிவாக கூற மறந்து விட்டு, அடுத்த கேள்வியை என்னிடமிருந்து எதிர... மேலும் பார்க்க

`மகாகவியென்றாலே பேராற்றல், பேரதிசயம்...' - வியக்கும் எள்ளு பேரன் நிரஞ்சன் பாரதி!

மகாகவி என போற்றப்படும் பாரதியாரின் 143 பிறந்தநாளான நேற்று தமிழகம் மட்டுமன்றி, உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் இந்த நாளை கொண்டாடி வருகின்றனர். பாரதியின் முழு படைப்பு தொகுப்புகளை பிரதமர் நரேந்... மேலும் பார்க்க